பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்.. 50 லட்சத்திற்கு மேல் அல்ல போகும் கில்லாடி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் இறுதி கட்டத்தை நெருங்க உள்ளது. இப்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி, கதிரவன், ஏடிகே, அமுதவாணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் மீதம் உள்ளனர். இந்நிலையில் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பெரும்பாலானோர் விக்ரமன் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்லப் போகிறார் என்பதை விஜய் டிவி முன்பே முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேறினார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த சீசனின் வெளியேறிய போட்டியாளர்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் அசீம். சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவருக்கு வெளியில் ரசிகர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் ஆரம்பம் முதலில் இவர் எந்த விஷயமாக இருந்தாலும் கடுமையாக பேசக்கூடியவர்.

ஆனாலும் அசீமுக்கு ஆதரவு பெருகி தான் வந்தது. கடந்த வாரம் கமல் எபிசோடில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற யாருக்கு இந்த வீட்டில் அருகதை இல்லை என்று நினைக்கிறேன் மற்ற போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். அதில் பெரும்பாலானோர் அசீம் தான் என்று கூறியிருந்தனர்.

Also Read : பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

எல்லோருமே நம்மை டார்கெட் செய்கிறாரே என்று மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அசீம் பிக் பாஸ் கதவைத் திறந்து வெளியே பெருமூச்சு விட்டு வானத்தைப் பார்த்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. இதேபோல் தான் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எல்லோரும் ஆரியை டார்கெட் செய்தார்கள்.

ஆனால் கடைசியில் ஆரி தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். அதேபோல் இந்த சீசனிலும் அசீம் தான் டைட்டில் வின்னரை அடிப்பார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இதன் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அசீம் பெற உள்ளார் என கூறப்படுகிறது.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர்.. திட்டம் போட்டு காயை நகர்த்திய விஜய் டிவி

- Advertisement -spot_img

Trending News