Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாஸ்லியா, அனிதா வரிசையில் களமிறங்கும் முதல் ஆண் நியூஸ் ரீடர்.. உறுதியானது பிக்பாஸின் 4ம் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 7ல் முதல் முதலாக களமிறங்கும் ஒரு ஆண் செய்தி வாசிப்பாளர்.

lasliya-anitha-bb

Bigg Boss Season 7 Contestants: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து ஏழாவது சீசனை வரும் அக்டோபர் எட்டாம் தேதி துவங்க இருக்கின்றனர். அதனால் இதில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் யார் என்பதை பற்றி தான் இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது. 

அதிலும் இதற்கு முந்தைய சீசனில் ஏதாவது ஒரு செய்தி வாசிப்பாளரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுப்பி வைத்து அவர்களை பிரபலமாக்கி விடுவார்கள். அந்த வகையில் இதுவரை நடந்த சீசன்களில் பாத்திமா, லாஸ்லியா, அனிதா சம்பத் போன்ற செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தினர்.

Also Read: முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

ஆனால் இந்த முறை கூடுதல் சிறப்பாக ஒரு ஆண் செய்தி வாசிப்பாளரை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 4ம் போட்டியாளராக களம் இறக்கப் போகின்றனர். இதற்கு முன்பு பெண் செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், முதன்முதலாக ஒரு ஆண் செய்தி வாசிப்பாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார்.

பிரபல நியூஸ் சேனல்களில் கணீர் குரளில் செய்திகளை வாசித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை வகுத்தவர் தான் நியூஸ் ரீடர் ரஞ்சித். இவர் பாலிமர் போன்ற முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் தன்னுடைய தனித்துவமான குரலில் செய்திகளை வாசித்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

Also Read: பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கு தயாரான EVP ஃபிலிம் சிட்டி.. ஆனா இந்த வாட்டி ரெண்டு பிக்பாஸ் வீடு!

இவருடைய குரலில் செய்தியை கேட்பதற்கு என்றே பலரும் தொலைக்காட்சி முன்பு குறித்த நேரத்தில் காத்துக் கிடப்பதும் உண்டு. அப்படிப்பட்ட இவரை இந்த முறை விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப் போகின்றனர்.

ஏற்கனவே சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவிற்கான சூட் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் விரைவில் விஜய் டிவியில் ப்ரோமோ  வெளியாகப் போவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ரேகா நாயர், பப்லு, பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா போன்ற 3 போட்டியாளர்கள் தேர்வான நிலையில், நான்காவதாக ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகிறார்.

நியூஸ் ரீடர் ரஞ்சித்

news-reader-ranjith-cinemapettai

news-reader-ranjith-cinemapettai

Also Read: பிக் பாஸ் சீசன் 7ல் கமல் வாங்கும் சம்பளம்.. காற்றுள்ள போதே கல்லாவை நிரப்பும் உலக நாயகன்

Continue Reading
To Top