பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. அட இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதல் ஜோடியா!

Bigg Boss Season 7 Contestants List: சின்னத்திரை ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே எப்போ தொடங்கும் என காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 7 நேற்று கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கிட்டதட்ட ஐந்து மணி நேரம் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும், முதல் நாள் என்ன நடந்தது என்றும் பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ்க்கு வணக்கத்தை போடு என என்ட்ரி ஆன இவரை முதல் நாளே கேப்டன் பதவி கொடுக்கிறேன் என சர்ச்சையில் சிக்க வைத்து விட்டார் பிக் பாஸ். இரண்டாவதாக என்ட்ரி கொடுத்தது அராத்தி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி.

Also Read:விஜய் டிவியை குத்தகைக்கு எடுத்த பிக் பாஸ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து விடும் கூல் சுரேஷ்

ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மௌன ராகம் 2 சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரவீனா மூன்றாவது போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். நடிகர் கவினின் நெருங்கிய நண்பரும், வாழ் மற்றும் டாடா படத்தில் நடித்த பிரதீப் ஆண்டனி இந்த சீசனில் கலந்து கொள்ளுகிறார். மேலும் ராப் பாடகர் நிக்ஸன் இந்த சீசனில் போட்டியாளராக சென்றிருக்கிறார்.

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, டான்ஸ் மாஸ்டர் மணிச்சந்திரா, லவ் டுடே படத்தில் நடித்த அக்சயா உதயகுமார், ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அதகளப்படுத்திய வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், விஜய் டிவியின் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஷு ஆகியோர் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

Also Read:பிக் பாஸ் வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. மூர்த்தியின் தம்பியை தூக்கிய விஜய் டிவி

ஆபீஸ் தொடரின் மூலம் பெண் ரசிகைகளை தன் வசம் வைத்திருந்த நடிகர் விஷ்ணு, விக்ரம் படத்தில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன், பாண்டியன் ஸ்டோர் சீரியலின் கடைக்குட்டி சரவண விக்ரம், பின்னணி பாடகர் யுகேந்திரன், 90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லதுரை, கண்டன்ட் ரைட்டர் அனன்யா ராவ், நடன கலைஞர் விஜய் வர்மா ஆகியோரும் இந்த சீசனின் போட்டியாளர்கள்.

எப்போதுமே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு தான் காதல் கண்டெண்டுகள் ஆரம்பிக்கும். ஆனால் இந்த முறை ஏற்கனவே ரவீனா மற்றும் மணிச்சந்திரா காதலித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே இப்போது ஒரே வீட்டில் இருப்பதால் ரொமான்டிக் டிராக்குக்கு பஞ்சம் இருக்காது.

Also Read:குருநாதா இத்தனை நாளா எங்க போனீங்க.. குணசேகரனுக்கு பதிலாக சரவெடியாக வெடிக்க போகும் பட்டாசு நடிகர்

- Advertisement -