விஜய் டிவியை குத்தகைக்கு எடுத்த பிக் பாஸ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து விடும் கூல் சுரேஷ்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் அந்த தொலைக்காட்சியில் உள்ள பிரபலங்கள் பங்கேற்பது வழக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் விஜய் டிவியிலிருந்து பங்கு பெற உள்ளார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களான விஷ்ணு, ரவீனா, பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனாக நடித்து வரும் சரவணன், பாரதி கண்ணம்மா தொடர் கதாநாயகி வினுஷா தேவி, குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற விசித்ரா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, டான்ஸ் மாஸ்டர் மணி சந்திரா, அமீரின் தங்கை ஐசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Also Read : பிக் பாஸ் வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. மூர்த்தியின் தம்பியை தூக்கிய விஜய் டிவி

இவ்வாறு விஜய் டிவி பிரபலங்களையே குத்தகை எடுத்துள்ளது பிக் பாஸ். மற்றொருபுறம் மலேசியா வாசு தேவனின் மகன் பாடகர் யுகேந்திரா, டாடா மற்றும் வால் ஆகிய படங்களில் நடித்த பிரதீப் ஆண்டனி, விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணா, டான்சர் விஜய் வர்மா ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்கிறார்கள்.

எப்போதுமே மாடலிங் துறையில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிலையில் இந்த சீசனில் மாடல் அழகி அனன்யா ராவ் கலந்து கொள்கிறார். இவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பாலாவின் நெருங்கிய தோழியாம். இதை அடுத்து எழுத்தாளர் பவா செல்லதுரை மற்றும் லவ் டுடே படத்தில் நடித்த அக்ஷயா உதயகுமார் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Also Read : டிஆர்பி இல்லாததால் அதிரடியாக ஊத்தி மூடப்படும் விஜய் டிவி சீரியல்.. 1300 எபிசோடை கடந்த சீரியலாச்சே!

இதைத்தொடர்ந்து யூடியூபர் பூர்ணிமா ரவி பிக் பாஸில் கலந்து கொள்கிறார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிம்புவின் தீவிர ரசிகர் மற்றும் நடிகருமான கூல் சுரேஷ் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவருடைய பேச்சு மற்றும் நடவடிக்கை வெளியிலேயே பல சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

சமீபத்தில் கூட தொகுப்பாளினி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மாலை போட்டது இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. அதன் பிறகு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டும் கூல் சுரேஷ் வீடியோ போட்டிருந்தார். இப்போது வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக பிக் பாஸில் கலந்து கொண்டு என்னென்ன அசிங்கப்பட போகிறாரோ கூல் சுரேஷ் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Also Read : விஜய் டிவி கதாநாயகி ஷோவின் டைட்டில் வின்னர் இவர்தான்.. இழுத்து மூடிட்டு புதுசாக வரும் நிகழ்ச்சி