அர்ச்சனாவுக்கு தண்ணி, தம் அடிக்கிற பழக்கம் இருக்காம்.. குடிச்சிட்டு கீழ விழுந்த நீ யோக்கியமா.?

BIgg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவிற்கு சோசியல் மீடியாவில் தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பட்டாசு போல் வெடித்து கொண்டிருக்கிறார். இவரால் தான் பிக் பாஸ் டிஆர்பியும் எகிறுகிறது.

இதையெல்லாம் தாங்க முடியாத வத்திக்குச்சி வனிதா, ரிவ்யூ ஷோவில் அர்ச்சனாவை பற்றி வாய்க்கூசாமல் நிறையவே பேசி விட்டார். ‘குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், டிரக் அடிப்பது போன்ற பழக்கமெல்லாம் அர்ச்சனாவுக்கு இருக்குது. அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்திருப்பதே ஆபத்து. நிறைய தடவை அவர் தனியாக எதையோ மறைத்து எடுத்துக்கொண்டு போவதை நிகழ்ச்சியில் பார்க்கிறோம்.

இருப்பினும் வழக்கம் போல் அவர்களுக்கு வேண்டிய போதைப்பொருள் கிடைக்கவில்லை என்றால், சைக்கோ போலவே நடந்து கொள்வார்கள். தேவை இல்லாமல் கத்துவார்கள், திடீரென்று அழுகுவார்கள், இதெல்லாம் அர்ச்சனாவிடமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

Also read: உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா.? மாயா மாஃபியாவை வச்சு செய்யும் கர்மா

யோக்கியம் மாதிரி பேசும் வத்திக்குச்சி வனிதா

கடந்த வாரம் விஷ்ணு என்றால், இந்த வாரம் நிக்சன். ஆண் போட்டியாளர்களுடன் வாயைக் கொடுத்து அவர்களை சூடேற்றி, கை நீட்ட வைப்பது தான் இவருடைய பிளான். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ட்ரியான முதல் வாரத்தில், ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பிரதீப்புக்கு சப்போர்ட்டாக பேசி பேமஸ் ஆகிவிட்டார். இவரைப் போலவே ட்ரக் பழக்கம் இருந்தவர்கள் என்னுடைய சீசனிலும் இருந்தார்கள்.

அவர்கள் எப்போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என்றே தெரியாது. இந்த சீசனில் அப்படித்தான் அர்ச்சனாவும் நடந்து கொள்கிறார். இவர் பேசுறது, செய்றதை எல்லாம் ஊக்குவிக்காதீர்கள்! என்று அர்ச்சனாவை குறித்து பரபரப்பான விஷயத்தை சமீபத்திய பேட்டியில் வத்திக்குச்சி வனிதா கொளுத்தி போட்டார்.

ஆனால் இவர் பெரிய யோக்கியம் மாதிரி பேசுறார். குடித்துவிட்டு கீழே விழுந்துட்டு, ‘பிரதீப் தான் என்னை ஆளை வைத்து அடித்தார்’ என்று கட்டுக்கதை சொன்னவர் தானே!. நீயே ஏழு புருஷனை கட்டிட்டு ஒருத்தர் கூட உருப்படியா வாழல. உன் புத்தி இப்படித்தான் இருக்கும்! என்று நெட்டிசன்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி அர்ச்சனாவால் தான் காரசாரமாக செல்கிறது. இவருடைய பொண்ணு ஜோவிகாவும் இப்போது வெளியே வந்து விட்டார். இந்த காண்டுல தான் அர்ச்சனாவை பற்றி அபாண்டமா பேசுகிறார்.

Also read: பெண்ணியமா பேசுற, இப்ப பாரு ஆன்ட்டி.. தொக்காக சிக்கிய மாயாவுக்கு ஆப்படிக்க போகும் அர்ச்சனா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்