பீஸ்ட் படத்திற்கு தடை, என்ன காரணமா இருக்கும்.? திடீரென பகிர் கிளப்பிய சம்பவம்

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இதில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் என பலர் நடித்துள்ளார். வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

கடந்த 2ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலரில் ஒரு ஷாப்பிங் மாலில் ஹைஜாக் நடப்பது போன்றும், அதில் சிக்கிருப்பவர்களை விஜய் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படியில் அந்த படத்திற்கு குவைத் நாட்டில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் நாடு அதிகார பூர்வமாக தீவிரவாதத்தை எதிர்ப்பதால், அவ்வாறான காட்சிகள் இடம் பெரும் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது. அரேபிய நாடுகளால் ஊக்குவிக்கப்படாத இஸ்லாமிய பயங்கரவாதத்தை படம் சித்தரிக்கிறது. அரபு நாடுகளை வில்லன்கள் மற்றும் பயங்கரவாதிகளின் தாயகமாகக் காட்டும் எந்தப் படத்திற்கும் குவைத்தில் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதே நேரத்தில் யுஏஇ போன்ற சில அரபு நாடுகள் படத்தை திரையிட அனுமதி வழங்கியுள்ளன. சென்னையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலிற்கு வருபவர்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கும் பயங்கரவாதிகளால் கடத்தப்படும் சூழ்நிலையை படம் கையாள்கிறது. மாலில் சிக்கிய உளவாளியான ஹீரோ விஜய், பயங்கரவாதிகளை ஒழித்து பணயக்கைதிகளை எப்படி காப்பாற்றுகிறார் எனபதே படத்தின் கதை.

முன்னதாக துல்கர் சல்மானின் குருப் திரைப்படமும் தடைசெய்யப்பட்டது, ஏனெனில் குவைத் அரசாங்கம் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு தேடப்படும் குற்றவாளியை தங்கள் நாட்டில் தஞ்சம் அடைவதை காட்டப்பட்டதை விரும்பவில்லை.

இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரைப் பார்க்க காத்திருந்த குவைத்தில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு இது நிச்சயமாக ஒரு பெரிய அடியாகும். மேலும், இந்த தடை வெளிநாட்டு வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்