மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

பிக் பாஸ் சீசன் 6 பைனல்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்து அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை பெற்றார். ஆனால் இந்த வெற்றியை சோசியல் மீடியாவில் பிக் பாஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை.

நியாயமாக இந்த வெற்றி விக்ரமன் அல்லது சிவின் இருவரும் ஒருவருக்கு தான் கிடைத்திருக்கணும் என்று தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புகிறது. அதிலும் அதே சீசனில் பங்கேற்ற பெண் போட்டியாளர் ஒருவர் அசீம்மின் வெற்றி மிக மட்டமான முன்னுதாரணம் என்று விஜய் டிவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசி இருக்கிறார்.

Also Read: அசீம் 50 லட்சம் ஜெயிச்சாலும் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. கைக்கு எட்டனது வாய்க்கு எட்டாம போச்சே

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அசின் டைட்டில் வின்னர் ஆக தேர்வானதற்கு மற்ற போட்டியாளர்கள் அவருடைய வெற்றியைக் குறித்து எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மௌனம் காத்தனர். இன்னிலையில் நிலையில் விஜே மகேஸ்வரி மட்டும் தைரியமாக தனது கருத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரையில் அசீம் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களது உணர்வுகளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத காட்டுமிராண்டியாகவே இருந்திருக்கிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 ஒட்டு மொத்த சர்ச்சைகளின் லிஸ்ட்.. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியவருக்கு டிராபியா.?

மேலும் பிக் பாஸ் சீசன் 6 கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக பார்க்கப்பட்ட அசீம், 2-வது வாரத்தில் நடந்த ரேங்கிங் டாஸ்கின் போது விக்ரமன் மற்றும் ஆயிஷா இருவரையும் ஒருமையில் பேசி சர்ச்சைகள் சிக்கினார். இதனால் அவருக்கு நிச்சயம் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கமல் அவருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுத்தார்.

கடைசியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு டிராபி கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையெல்லாம் மூடி மறைக்க வேண்டும் என்பதற்காகவே அசீம் ஜெயிச்ச 50 லட்சத்தில் பாதி தொகையை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி நிவாரண நிதிக்கும் கொடுத்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றார். அப்படியும் அசீம்மின் வெற்றியை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Also Read: விக்ரமனை அடுத்து அபியூஸ் அசீம் வெளியிட்ட வைரல் ட்வீட்.. ச்சே இவரை போய் கருப்பு ஆடுன்னு சொல்லிட்டோமே

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்