படையப்பா படத்தை காப்பி அடிச்சுட்டாங்களே.. கிளைமாக்ஸில் கூட சுவாரசியம் இல்லாமல் சப்புனு முடியும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளதால் கிளைமாக்ஸில் சுவாரசியம் ஏதாவது இருக்குமோ என்று சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

இறுதிக்கட்டத்திலும் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனர் சொந்தமாக யோசித்து ஸ்கிரிப்ட் எழுதாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தின் கிளைமாக்ஸ் அப்படியே காப்பி அடித்து ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறார்.

Also Read: வீட்டுக்குள்ள பத்தாதுன்னு வீதியிலும் வெடிக்கப் போகும் சக்காளத்தி சண்டை.. பாக்கியாவுக்கு எதிராக வில்லியாக மாறும் ராதிகா

இதில் வெண்பா, நீலாம்பரி ஆகவே மாறி அப்படியே ரம்யா கிருஷ்ணன் நடிப்பை வெளி காட்டினார். 15 வருடங்களாக பாரதியின் வாழ்க்கையில் என்னென்ன நடந்ததோ அதற்கெல்லாம் மூல காரணமாக வெண்பாதான் இருந்திருக்கிறார் என்பதையும் அவர் வாயாலே ஒத்துக்கொண்டார்.

பாரதியின் கல்லூரி காதலி ஹேமாவை லாரி ஏற்றி கொலை செய்ததும், அதன்பின் அவருக்கு ஆண்மை இல்லை என்று பொய் சொல்லி கண்ணம்மாவுடன் சேரவிடாமல் செய்ததும், பிறகு கண்ணம்மாவை கொலை செய்யத் துணிந்ததும் என அடுக்கடுக்காக வெண்பா செய்த கேவலத்தை வரிசையாக பட்டியலிட்டார்.

Also Read: 2022ல் திருமணம் செய்த 5 சின்னத்திரை நட்சத்திரங்கள்.. பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி

இதைக் கேட்டதும் வெறி ஏறிய பாரதி அவரைக் கொல்ல துணிந்தார். இதன் பின் போலீஸ் அந்த இடத்திற்கு வந்து வெண்பாவை கைது செய்தது. அந்த சமயத்தில் கூட பாரதியை அவ்வளவு ஈசியாக விட்டு விடமாட்டேன் என வெண்பா பைத்தியக்காரி போல் சிரித்துக் கொண்டே செல்கிறார்.

இதன் பிறகு கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பாரதி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ ஆசைப்படுவார். ஆனால் பாரதியை கண்ணம்மா மன்னித்தாலும் இரண்டு குழந்தைகள் மன்னிக்க தயாராகவில்லை. இத்துடன் பாரதிகண்ணம்மா சீரியலை நிறைவு செய்யப் போகின்றனர்.

Also Read: இவங்க பைத்தியமா! இல்ல நம்ம பைத்தியமானே தெரியலையே.. கிளைமாக்ஸில் கதற விடும் பாரதிகண்ணம்மா

இதன்பிறகு இந்த சீரியலின் 2-ம் பாகம் தொடரப்போகிறது. அதில் ஹேமா, லக்ஷ்மி இருவரும் வளர்ந்த நிலையில் அவர்களை மையமாக வைத்தே கதை நகர்வது போல் உருவாக்கியிருப்பார்கள். மேலும் இந்த வாரத்துடன் பாரதிகண்ணம்மா சீரியல் நிறைவடைவதால் பலரும், ‘போரடிக்கும் இந்த சீரியலை சீக்கிரம் ஓட்டி மூடுங்க’ என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

Next Story

- Advertisement -