சர்ஜரிக்கு வந்துட்டு இப்படியா பண்றது.? லாஜிக்கே இல்லாமல் உருட்டும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வயதான தம்பதியினரை வைத்து இப்போது கதையை ஓட்டுகின்றனர். இதில் சௌந்தர்யாவின் கல்லூரி ஆசிரியரான வயதான ஜானகி இருதயம் பலவீனமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்னும் மூன்று நான்கு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பார் என்பதனால் வெளியூரில் இருக்கும் அவர்களுடைய மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அனைவரும் ஜானகியுடன் இருக்கும்படி பாரதி கண்ணம்மா இருவரும் ஏற்பாடு செய்கின்றனர்.

மேலும் மருத்துவமனையிலேயே ஜானகி பேராசிரியராக இருந்தபோது படித்த மாணவர்களின் ரியூனியன் ஃபங்ஷனையும் பாரதி-கண்ணம்மா இருவரும் பிரம்மாண்டமாக அலங்காரத்துடன் ஏற்பாடு செய்கின்றனர். இதெல்லாம் பார்க்கும்போது ஒரு நியாயம் வேண்டாமா இப்படியா ஹாஸ்பிட்டலில் ஃபங்ஷனை நடத்துவது.

இதுமட்டுமின்றி இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்பதை ஜானகி தெரிந்து கொண்ட பிறகு, இந்த கொஞ்ச நாட்களில் சந்தோசமான நினைவுகளுடன் திரும்ப வேண்டும் என முடிவெடுத்து, இளம் வயதில் வேலை பார்த்த பள்ளி, திருமணம் நடந்த பிறகு தங்கிய முதல் வீடு என அனைத்தையும் தன்னுடைய பேரப்பிள்ளைகள் மருமகள்கள் உடன் திரும்பவும் சென்று பார்க்கிறார்.

பாரதி, கண்ணம்மா இருவரும் கணவன்-மனைவி என்பதை அறிந்த ஜானகி, அவர்களை சேர்த்து வைப்பதற்காக யோசனை ஒன்றைக் கூறி சத்தியம் வாங்குகிறார். அவர்களிடம் இருக்கும் பிரச்சினையை மறந்து பிள்ளைகளுடன் ஒரு நாள் வெளியே சென்று சந்தோசமாக வாழ்ந்து பார்க்கும்படி இருவரிடமும் ஜானகி சத்தியம் வாங்குகிறார்.

இப்படி இருதயம் பலவீனமான நிலையில் சர்ஜரிகாக ஹாஸ்பிடல் வந்த ஜானகி, டூருக்கு வந்ததுபோல் லூட்டி அடிப்பதும், அட்மின் ஆபிஸர் கண்ணம்மா உத்தரவுடன் கிளம்பி வெளியே போவதற்கு என சீரியலில் அநியாயம் பண்ணுவதை பார்க்க முடியாமல் சின்னத்திரை ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

அதுமட்டுமின்றி கதைக்களத்தையே மாற்றி முன்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை, இப்போது வயதான தம்பதியர்கள் என ஸ்கிரிப்ட்டை சீரியலின் இயக்குனர் உருட்டிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இவர் எழுதும் போது வேறொரு உலகத்திற்கு சென்று விட்டார் போல தெரிகிறது.

இதற்கிடையில் ஹேமாவுக்கும் கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. பிள்ளைகள், மனைவி என அனைவரும் பாரதி, கண்ணம்மாவை சந்தேகத்துடன் பார்ப்பதை எதிர்த்து கேட்காமல் அமைதி காப்பது ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் டிவி சீரியல்களைப் பொறுத்தவரை பாக்கியலட்சுமி தான் தற்போது காரசாரமாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனரை திட்டித் தீர்க்கின்றனர்.

Next Story

- Advertisement -