வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட் எழுதிய பாரதி கண்ணம்மா சீரியல்.. டிஆர்பிக்காக இப்படி எல்லாமா பண்ணுவீங்க!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நேரத்தில் கூட இயக்குனர் ஜவ்வாக கதையை இழுத்து வருகிறார். இப்போது டிஆர்பிக்காக படு கேவலமான வேலையில் இத்தொடர் இறங்கி உள்ளது.

அதாவது தனது தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என ஹேமா வெளியில் செல்கிறார். அப்போது ரவுடிகளால் கடத்தப்பட்ட ஹேமாவை ஒரு வழியாக கண்ணம்மா காப்பாற்றி விடுகிறார். இந்நிலையில் அந்தச் சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹேமாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Also Read : பாக்யாவை கதற விடும் வாரிசு.. ராதிகாவிற்கு எதிராக நடக்கும் கூட்டு சதி

இதுதான் சரியான நேரம், அப்பாவை கண்டுபிடிக்க ஒரே வழி இது என மொட்டை மாடியில் ஏறி தற்கொலை செய்வது போல, அப்பா யார் என்று சொன்னால் தான் இறங்கி வருவேன் என்று ஹேமா அடம் பிடிக்கிறார். இவ்வாறு ஒரு குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட்டை பாரதி கண்ணம்மா இயக்குனர் எழுதி உள்ளார்.

இந்தத் தொடரை பார்க்கும் பல குழந்தைகளுக்கு இவ்வாறு செய்தால் நமக்கு தேவையானது கிடைத்து விடும் என்ற எண்ணம் வர அதிக வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான குழந்தைகள் இப்போது சினிமா, சீரியல் பார்த்து தான் இது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.

Also Read : விஜய் டிவிக்கே சரியான பாடம் கற்பித்த விக்ரமன்.. தவறை மாற்றிய பிக் பாஸ்

சமீபகாலமாக இளைய சமுதாயத்தில் நிறைய தற்கொலை முயற்சிகள் செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, இவ்வாறு தவறான விஷயங்களை போதிக்காமல் இருக்கலாம்.

ஆனால் கதையை ஓட்ட வேண்டும் என்பதற்காக இவ்வளவு தரைக்குறைவாக விஜய் டிவி இறங்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்த பாரதி கண்ணம்மா தொடரின் ப்ரோமோவை பார்த்த பலரும் கடும் கோபத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : பிக் பாஸில் இறுதி வாரம் வரை செல்லும் 5 போட்டியாளர்கள்.. நமிதா மாரிமுத்து விட்ட இடத்தை பிடித்த சிவின்

- Advertisement -

Trending News