விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் வித்யாசமான கதைக் கருவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன், தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கண்ணம்மா கதாபாத்திரத்தை பொருத்தவரை ஒரு சாதாரண பெண்ணாகவும், அதாவது கருப்பு நிற கதாநாயகியாக இருக்கக்கூடிய கதாபாத்திரமாக, கண்ணம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். திடீரென்று நடிகை ரோஷினி விளகுவதால் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கதாநாயகியை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த கதாபாத்திரத்திற்கு பல நடிகைகளை தேர்வு செய்துள்ளனர். தற்போது இறுதியாக யாரடி நீ மோகினி நாடகத்தில் கதாநாயகியாக நடித்த நட்சத்திராவை கமிட் செய்துள்ளனர். யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கண்ணம்மாவாக ரோஷினி நிறைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டதால் அவை அனைத்தும் ஒளிபரப்பு செய்த பிறகு நட்சத்திரா கண்ணம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் களமிறங்கக்கூடிய நட்சத்திரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் மகளாக நடித்த அதே குழந்தை தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் லிசா குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே லிசா மற்றும் நட்சத்திரா இருவருக்கும் பக்கா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி ஏகப்பட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பறக்க விட்டனர். இந்நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் மீண்டும் இவர்கள் இணைந்து நடித்தால் சீரியல் வேற லெவல் ஹிட்டாகும். எனவே இதை அறிந்த ரசிகர்கள் ரோஷினி சீரியலில் இருந்து விலகினாலும் அவருக்குப்பின் நிகழ உள்ள சீரியல் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.