கவனிக்காமல் விட்ட டைரக்டரை கூப்பிட்டு சசிகுமார் கொடுத்த வாய்ப்பு.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் பரமன்

Bhagyaraj and Sasikumar joins Mundhanai mudichu 2 will start soon: தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு வாரிசு அரசியல் மூலமாக ஈசியாக வாய்ப்பு கிடைத்துவிட, பலரோ முட்டி மோதி போராடி தான் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராகி நடிகராக மாறியவர் தான் சசிகுமார்.

அமீரின் உதவி இயக்குனராக இருந்து சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம்  இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். முதல் படத்திலேயே தமிழ் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்து சபாஷ் வாங்கி இருந்தார் இந்த பரமன். 

சுப்பிரமணியபுரம் தொடங்கி அயோத்தி வரை சசிகுமார் நடித்த படங்கள் என்றாலே, காதல் கொஞ்சம் கம்மி! நட்பு கொஞ்சம் தூக்கல்! என இதயத்தை தொடும் வசனங்களுடன் மனிதத்தை தட்டி எழுப்புவார் சசிகுமார். தனி பெரும்பான்மையுடன் தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர நடிகராக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பேட்ட படத்தில் கலக்கி இருந்தார் சசி.

Also read: அழகர், பரமனை ஞாபகப்படுத்திய வெங்கட் பிரபு.. 15 வருடம் ஆட்டிப்படைத்த படம், சசிகுமாருக்கு கொடுத்த பரிசு

கடந்த ஆண்டு சசி நடித்த அயோத்தி திரைப்படம் எந்த ஒரு ஆபாசமும், நகைச்சுவையும் இல்லாமல் இருந்த போதும் மனிதர்களின் உணர்வினை தட்டி எழுப்பி கண்ணீர் விட செய்து மனிதம் மறையவில்லை என்பதை நிரூபித்தது. அயோத்தி படத்தின் வெற்றிக்கு பின் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சசிகுமார்.

தற்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்து நடிக்க உள்ளார் சசிகுமார். ஜே எஸ் பி பிலிம் ஸ்டூடியோஸிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட, திரைக்கதை வசனம் முதலானவை பாக்கியராஜிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இயக்குனராக சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் மற்றும் கிடா படத்தை இயக்கிய ஆர் ஏ வெங்கட் இவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெங்கட்டுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் சசிகுமார். பாக்யராஜும் முக்கியமான ஒரு ரோலில் நடிக்க உள்ளதாக தகவல். காதை பிளக்கும் ஆக்சன் படங்களுக்கு மத்தியில்  குடும்பங்கள் கொண்டாடும் படங்கள் வருவது நன்மையே!

Also read: 13 நடிகர்களை வைத்து சசிகுமார் ஆடப்போகும் ஆட்டம்.. பழைய ரூட்டை கையில் எடுக்கும் கிடாரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்