கோபி அங்கிளை வீட்டை விட்டு துரத்தும் பாக்யா.. பழனிச்சாமி முன் அசிங்கப்படும் எக்ஸ் புருஷன்

Bhagiyalakshmi : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது எதிர்பாராத பல ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இப்போது தனது வேலைக்காக பாக்யா பல முயற்சிகள் செய்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக தற்போது வரை அவரது தோழர் பழனிச்சாமியும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆரம்பம் முதலே பழனிச்சாமியின் மீது வெறுப்புடன் இருந்து வருகிறார் கோபி. அதுவும் பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரையும் தவறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பலமுறை பாக்யா எரிச்சல் அடைந்து கோபியை திட்டியதும் உண்டு. ஆனால் கோபி திருந்திய பாடு இல்லை.

இந்த சூழலில் தற்போது தொழில் பற்றி பேசுவதற்காக பழனிச்சாமி பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது ஹாலில் இருவரும் ஒன்றாக பேசுவதை பார்த்துவிட்டு கோபி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அதாவது நடு ஹாலில் இவ்வாறு இருவரும் வெட்கமே இல்லாமல் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறீர்களே என கண்டபடி கோபி பேச ஆரம்பிக்கிறார்.

Also Read : பாக்கியாவின் கேரக்டரை கொச்சைப்படுத்தி பேசிய முன்னாள் கணவர்.. அப்படியே மண்ணு மாதிரி நிற்கும் மங்குனி

இதனால் ஆத்திரமடைந்த பாக்யா தன்னுடைய எக்ஸ் புருஷன் கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார். இது என்னுடைய வீடு என கோபி ஆணவத்துடன் பேசுகிறார். உடனே கோபத்தின் உச்சிக்குப் போன பாக்யா இது என்னுடைய வீடு வீட்டை விட்டு வெளியே போங்க என அதட்டலாக பேசுகிறார்.

புள்ள பூச்சியாக இருந்த பாக்யாவா இதுவா என ஒரு கணம் கோபி அப்படியே ஆடிப் போய் விடுகிறார். மேலும் இதனால் கோபி வீட்டை விட்டு வெளியே போனால் ஈஸ்வரி மற்றும் பாக்யா இடையே பிரச்சனை நடப்பது உறுதி. மேலும் பழனிச்சாமி முன் கோபி இவ்வாறு அசிங்கப்பட்டதால் கண்டிப்பாக பாக்யாவை பழிவாங்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்