ஐஸ்வர்யா ராயை மிஞ்சிய ஆக்சனா இருக்கே பாக்யா.. ரசிகர்களை கொலையாக கொள்ளும் இயக்குனர்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு நாள் மறைக்கப்பட்ட அத்தனை ரகசியமும் வெளிப்பட்டதால் இனி இந்த சீரியலில் என்ன காட்டு போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இவ்வளவு நாள் ராதிகாதான் கோபியின் கள்ளக்காதலி என்பது பாக்யாவிற்கு தெரியாமல் இருந்த நிலையில் அது தற்போது வெளிப்பட்டுள்ளது.

இதனால்  மனமுடைந்த பாக்யா மருத்துவமனையில் இருந்து கிளம்பி சுய நிலையை மறந்து நடைபிணமாக வீட்டிற்கு திரும்புகிறாள். கொட்டுகிற மழையில் நாலாபுறமும் எந்த வாகனம் வருகிறது என்பது கூட தெரியாமல் மனம் உடைந்துபோய் நடமாடும் பிணமாக மாறிவிட்டார்.

இந்த சீனை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா நடிப்பில் இதே போன்று ஒரு சீன் இடம்பெற்றிருக்கும். இதில் ஐஸ்வர்யா காதலித்த அப்பாஸ் வேறொரு பெண்ணை பணத்திற்காக திருமணம் செய்து கொள்ளும்போது ஐஸ்வர்யாராயும் தன்னிலை மறந்து கொட்டுகிற மழையில் சாக்கடைக் குழியில் விழுந்து விடுவார்.

ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சாக்கடை குழியில் விழாமல் தன்னுடைய வீட்டிற்கு சரியாக வந்து சேர்கிறார் இதைப்போன்று காட்சிதான் சன்டிவியின் சுந்தரி சீரியலிலும் சுந்தரி தன்னுடைய கணவன் தன்னை தூக்கி எறிந்து போதும் இதே போன்று கொட்டும் மழையில் நிர்க்கதியாக நடந்து வருவார்.

இப்படி படத்தை அட்ட காப்பியடிக்கும் சீரியல் இயக்குனர்கள் சீரியலை தொடர்ந்து பார்க்கும் சின்னத்திரை ரசிகர்களை கொலையாக கொள்ளுகின்றனர். மேலும் பாக்யா போகிற போக்கில் ராதிகா-கோபி திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து விடுவார் போல தெரிகிறது.

ஏனென்றால் ராதிகாவின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் பாக்யாவிற்கும் தெரியும் என்பதால் கோபிக்கு துளிகூட தன் மீது விருப்பம் இல்லாதபோது கட்டாயப்படுத்தி அவருடன் வாழ்வது சரியல்ல என பாக்யா இந்த முடிவை துணிச்சலுடன் தன்னுடைய குடும்பத்தினரின் உறுதுணையுடன் எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

Next Story

- Advertisement -