2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

இந்த வருடம் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதால் 2002 ஆம் ஆண்டில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சிறந்த டாப் 5 ஹீரோக்களின் லிஸ்ட் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் உலக நாயகன் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு மீண்டும் இளம் நடிகர்களுடன் ரேஸ்சுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் இந்த வருடத்தின் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ஆகும். மேலும் விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் தரமாக இருந்தது. இதனால் இந்த வருடம் சூர்யாவை விதவிதமான கோலத்தில் பார்க்க முடிந்ததால் இந்த வருடத்திற்கான டாப் 5 கதாநாயகர்களின் லிஸ்டில் சூர்யாவிற்கு 5-ம் இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: அறிமுகக் காட்சியில் அனல் பறக்க விட்ட 4 ஹீரோக்கள்.. இப்பவும் ரோலக்ஸ்காக காத்துக் கிடக்கும் வெறி பிடித்த ரசிகர்கள்

விக்ரம்: திரைபடங்களில் அதிக கெட்டப் போட்டு நடிப்பவர்களின் உலக நாயகனுக்கு அடுத்ததாக இருப்பவர் சியான் விக்ரம் ஆகும். இவர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் மகனுடன் மாஸ் காட்டியிருப்பார். கோப்ரா திரைப்படத்தில் அதிக கெட்டப் போட்டு நடித்து அசத்தி இருந்தார். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலனாக மிரட்டியதன் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 5 ஹீரோ லிஸ்டில் இவருக்கு 4-ம் இடம் கிடைத்திருக்கிறது.

அஜித்குமார்: அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு படத்திற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இந்நிலையில் இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை படத்தின் மூலம் பல விழிப்புணர்வுகளை வெளிப்படுத்தி அஜித் டாப் 5 ஹீரோ லிஸ்டில் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: ரஜினியை பின்பற்றும் அஜித், விஜய்.. எந்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்றாங்க

விஜய்: இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசுபடத்திற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இந்த வருடம்  வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் ஏமாற்றத்தை கொடுத்தாலும் படத்தில் உள்ள பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதுவே படத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு சிறந்த டாப் 5 ஹீரோ லிஸ்டில் விஜய் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

கமலஹாசன்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டிற்கான மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸை விரலை விட்டு ரேஸுக்கு வந்த உலக நாயகன் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி சிறந்த டாப் 5 கதாநாயகர்கள் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read: ரஜினியை போல் விஜய்யை காலி செய்வதற்கு விசுவாசிகள் செய்த வேலை.. தளபதி சூதானமா இருந்துக்கோங்க இல்லனா ஆபத்து

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 5 கதாநாயகன்கள் லிஸ்டில் உள்ளனர். மேலும் இந்த ஐந்து பேரில் யார் ஃபேவரிட் என்பதையும் ரசிகர்கள் தங்களுக்குள் விவாதிக்கின்றனர்.

Next Story

- Advertisement -