வில்லனுக்கு பின் ஹீரோவாக அடையாளப்படுத்தி சத்தியராஜின் 5 படங்கள்.. கட்டப்பாக்கு கிடைத்த தரமான அஸ்திவாரம்!

பணம் மற்றும் புகழை சம்பாதிப்பதற்காக பலர் சினிமாவை நாடி வருகிறார்கள். ஆனால் நடிப்பின் மீதுள்ள ஈடுபாடும் காரணமாக சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜை ஹீரோவாக்கிய படங்களை இப்போது பார்க்கலாம். அந்த ஐந்து படங்களும் சத்யராஜின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்.

நடிகன் : பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் 1990ல் வெளியான திரைப்படம் நடிகன். இப்படத்தில் சத்யராஜ் தனது அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு முதியவர் வேஷமிடுகிறார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நடிகன் என்பதை சத்யராஜ் நிரூபித்துள்ளார்.

வாழ்க்கைச் சக்கரம் : மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கௌதமி, கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாழ்க்கைச் சக்கரம். இப்படத்தில் சத்யராஜ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சத்யராஜின் நடிப்புக்கு வாழ்க்கை சக்கரம் படம் மேலும் வலு சேர்த்தது.

பூவிழி வாசலிலே : பாசில் இயக்கத்தில் சத்யராஜ், சுஜாதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பூவிழி வாசலிலே. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. மேலும் சில இடங்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

கடலோர கவிதைகள் : பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடிப்பில் வெளியான திரைப்படம் கடலோரக் கவிதைகள். சத்யராஜின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் இதுதான். மேலும் இப்படத்தில் ரேகாவின் ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இதற்கு முன்னதாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜை ஒரு ஹீரோவாக பிரதிபலித்தது கடலோர கவிதைகள் படம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு : பாசில் இயக்கத்தில் சத்யராஜ், ரேகா, சுகாசினி, ஜனகராஜ், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சுகாசினி தம்பதியினர் விபத்தில் தனது மகளை இழந்து விடுகின்றனர். அதன் பிறகு அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

இவ்வாறு சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளார். அதிலும் பாகுபலி படத்தில் அவருடைய கட்டப்பா கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து சத்யராஜ் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்