பிக் பாஸ் 7 டைட்டிலை தட்டி தூக்கியது இவர்தான்.. போட்ட கணிப்பு மொத்தமும் போச்சு, இணையத்தில் கசிந்த தகவல்

BB7 Tamil winner
BB7 Tamil winner

BB7 Tamil Winner: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நாளை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த சீசனை போல் பார்வையாளர்கள் இடையே அதிக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற சீசன் எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். இருந்தாலும் பார்வையாளர்கள் கடைசிவரை நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்ததற்கு காரணமே டைட்டிலை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களாகவே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று மக்களால் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதில் என்ன முக்கியமான பயம் என்றால், இப்படித்தான் மூன்றாவது சீசனில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று தொடக்கத்திலிருந்து மக்களால் உறுதிப்படுத்தப்பட்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் இறுதி வாரத்திற்கு முன்னரே வீட்டை விட்டு எலிமினேஷனில் வெளியேறினார்.

இப்படி ஒரு சம்பவம் அர்ச்சனாவுக்கு நடந்து விடுமோ என்ற பயம் அவருடைய ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்தது. அதிலும் கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க அர்ச்சனாவை நெகட்டிவ் ஆகவும், மாயாவை பெரிய தியாகி போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றது போல் ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ ஓட்டிங் தளத்தில் மாயா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே ஓட்டுக்கள் பரஸ்பர போட்டியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

Also Read:வனிதா உதவியோடு இறுதி வாரத்தில் களமிறங்கி இருக்கும் மாயா.. Bully Gang ஸ்கூலுக்கு அக்கா தான் ஹெட்மாஸ்டர் போல

இணையத்தில் கசிந்த தகவல்

தொடர்ந்து இன்று பிக் பாஸ் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இணையத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்ற தகவல் கசிந்து விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்த போட்டியாளர் மணி சந்திரா. திடீரென கடந்த சில வாரங்களாக அவருடைய ஓட்டு எண்ணிக்கை அதிகரித்தது. அதன்படி டான்ஸ் மாஸ்டர் மணி தான் இந்த சீசனில் ரன்னர் ஆகியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து தினேஷ் இரண்டாவது ரன்னர் ஆகி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே போட்டியில் வெற்றி பெற்ற விஷ்ணு மூன்றாவது ரன்னர் ஆகி இருக்கிறார். அப்படி என்றால் மாயா டைட்டிலை வின் பண்ணி இருப்பாரோ என்று பலருக்கும் பயம் தொற்றி இருக்கலாம். ஆனால் மாயா தான் இந்த இறுதிப் போட்டியில் நான்காவது ரன்னர் ஆகி முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50வது நாளிலிருந்து அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என மக்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. உண்மை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கு சாட்சியாக இப்போது அர்ச்சனா சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். பிரதீப்பிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த அர்ச்சனா ஜெயித்திருப்பது பிரதீப்பே ஜெயித்தது போல் பிக் பாஸ் பார்வையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Also Read:இறுதிவரை வன்மத்தை கக்கும் மாயாவின் விழுதுகள்.. அர்ச்சனாவுக்கு எதிராக கூட்டு சதியில் சேர்ந்த பிக்பாஸ்

BB7 title winner
BB7 title winner
Advertisement Amazon Prime Banner