புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இறுதிவரை வன்மத்தை கக்கும் மாயாவின் விழுதுகள்.. அர்ச்சனாவுக்கு எதிராக கூட்டு சதியில் சேர்ந்த பிக்பாஸ்

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தமட்டிலும் யாருக்கு டைட்டில் கொடுக்கிறார்களோ இல்லையோ, முதல் நாளிலிருந்து இந்த ஷோவை பொறுமையாக பார்த்த பார்வையாளர்களுக்குத்தான் விஜய் டிவி ஏதாவது பெரிசாக செய்ய வேண்டும். இவர்கள் அடிக்கும் கூத்தில் ஒவ்வொரு நாளும் எபிசோடு பார்த்து ரத்த கொதிப்பு அதிகரித்தது தான் பாக்கி. அந்த அளவுக்கு மோசமான ரியாலிட்டி ஷோவாக இது அமைந்துவிட்டது.

மற்ற பிக் பாஸ் சீசன்களில் என்னதான் ஆரம்பத்தில் அடித்துக் கொண்டாலும் நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பை காட்டிக் கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் கடைசி வரைக்கும் வன்மத்தை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற சீசன்களில் வெளியே போன போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் கெஸ்ட் ஆக வரும் பொழுது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

இந்த ஏழாவது சீசனில் கடைசி வாரம் முடிய போகிறது என்ற சந்தோஷம் கூட இல்லை. இவங்களை எல்லாம் எதுக்கு உள்ள கூப்பிட்டிங்க என பார்வையாளர்கள் கதறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சரவண விக்ரம் எலிமினேஷன் ஆகும்போது அட இவர் உள்ளே நடக்கும் உண்மையை தெரிந்து கொண்ட நேரத்தில் வெளியில் போகிறாரே என்ற வருத்தம் இருந்தது. அது மொத்தமும் தவறு, நான் திருந்தவே மாட்டேன் என காட்டிவிட்டார் சரவண விக்ரம்.

Also Read:தீயாக நடக்கும் ஓட்டு வேட்டை.. பிக்பாஸ் வரலாற்றை புரட்டிப் போடும் அர்ச்சனா

அனன்யா, அக்ஷயா, ஜோவிகா எல்லாம் உண்மையாகவே வெளியில் போய் பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுக்க பார்த்துவிட்டு தான் வந்தார்களா என்ற சந்தேகம் இப்போது எழுந்து இருக்கிறது. ஏற்கனவே வனிதா இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவை ஜெயிக்க விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அறைகூவல் போட்டுக் கொண்டிருக்கிறார். ஏகத்துக்கும் மாயாவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார்.

வன்மத்தை கக்கும் மாயாவின் விழுதுகள்

இப்போது அவர் வெளியில் செய்து கொண்டிருக்கும் வேலையை மகள் ஜோவிகா உள்ளே வந்து செய்து கொண்டிருக்கிறார். அதிலும் பிக் பாஸ் லைவ்வில் விக்ரம் நாங்கள் எல்லோரும் ஒன்றாக உள்ளே வந்ததே அர்ச்சனாவை தாக்குவதற்காக தான் என சொல்லி தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு நிரூபித்து விட்டார்.

மக்கள் ஓட்டு கடைசி நிமிஷத்தில் கூட மாறும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதையே மனதில் வைத்துக் கொண்டு மாயாவின் விஷமிகள் மொத்தமும் வீட்டிற்குள் கெஸ்ட் ஆக வந்து அர்ச்சனாவை தவறாக காட்ட சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் அர்ச்சனாவை பற்றி தப்பாக பேசுகிறார்களோ அந்த கிளிப்பிங்கை ஒன்று கூட விடாமல் ஒளிபரப்பி பிக் பாஸ் தன் சார்பாக மாயாவுக்கு வெற்றி கனியை பறித்து கொடுக்க ஆர்வமாக இருக்கிறார்.

Also Read:நோ சூடு, நோ சொரணை.. மாயாவுக்கு ஜால்ரா தட்டும் மிக்சர் பார்ட்டி

- Advertisement -

Trending News