வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

2 பேரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் பிக் பாஸ்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கல!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரத்தில் இந்த சீசன் நிறைவடையும் உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கிறது.

மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 10 பேரில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட போகின்றனர் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆகையால் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சிபி, நிரூப், வருண், பிரியங்கா, பாவனி, அக்ஷரா இவர்கள் 6 பேரில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே இந்த வாரம் எலிமினேட் செய்யப்படவுள்ளனர்.

எனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முதலாக டபுள் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. அத்துடன் பிக்பாஸ் வீட்டில் ஜோடிப் புறாக்கள் போல இணைந்தே இருக்கும் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் சேர்ந்தே வெளியே செல்ல உள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரை தவிர மீதமிருக்கும் எட்டு போட்டியாளர்களுள் ராஜு, பிரியங்கா, தாமரை ஆகியோர் மக்கள் அளித்த வாக்கில் டாப் லிஸ்டில் உள்ளனர். அத்துடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்தே வருண் மற்றும் அக்ஷரா இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கின்றனர்.

bb5-eviction-cinemapettai4
bb5-eviction-cinemapettai

இவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும். இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் நட்புக்கு சிறந்த உதாரணமாக இருந்து கொண்டிருக்கும் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் சென்றுவிட்டால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நாளைய நிகழ்ச்சியில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News