நடுத்தெருவில் நிற்கும் ராதிகா கோபி.. சவாலில் ஜெயிக்கப் போகும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கேரக்டர் ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியனாக அனைத்தையும் பெர்ஃபெக்க்ஷன் ஆக செய்து வருகிறார். கதையே இல்லை என்றாலும் இவருக்காகவே நாடகத்தை பலரும் பார்க்கிறார்கள். ஆனாலும் போகப் போக போர் அடிக்கும் விதமாக அரைச்ச மாவையே அரைத்து வருகிறார்கள்.

இதில் பாக்கியா, கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக கல்யாண ஆர்டரை நல்லபடியாக முடித்துவிட்டு பாதி பணத்தை ரெடி பண்ணிவிட்டார். இன்னும் மீதமுள்ள பணத்திற்கு என்ன பண்ணலாம் என்று யோசித்து நிலையில் கோபி இவரை சீண்டி, உன்னால எதுவும் கிழிக்க முடியாது அப்புறம் எதுக்கு சவால் விட்டு என்கிட்ட தோற்க போகிறாய் என்று சொல்கிறார்.

Also read: இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

உடனே ஆவேசப்பட்ட பாக்கியா இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதற்குள் உங்க பணத்தை நான் சொன்னபடி மூஞ்சில் தூக்கி எறிந்து விடுவேன் என்று சொல்கிறார். அடுத்து கோபியின் அப்பா வந்து ஏன் அவளையே டார்ச்சர் பண்ணிக் கொண்டிருக்கிறாய்? உனக்கு தேவை பணம். அதை என் மருமகள் இன்னும் இரண்டு நாட்களில் கொடுத்து விடுவார். முதலில் இங்கு இருந்து நீ கிளம்பு என்று சொல்கிறார்.

எப்படியும் பாக்கியா தான் ஜெயிக்கப் போகிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனாலும் இதை சீரியஸாக வைத்து கதையை கொண்டு வருகிறார் என்பதுதான் சகிக்க முடியவில்லை. இருந்தாலும் பாக்கியா ஜெயித்த பிறகு, கோபி மற்றும் ராதிகா இந்த வீட்டை விட்டு வெளியில் போகுவதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறது.

Also read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

அடுத்ததாக ராதிகா அவருடைய பங்கிற்கு பாக்கியாவை நோகடிக்க வேண்டும் என்பதற்காக கேண்டினில் படாத பாடு படுத்தி வருகிறார். அத்துடன் எங்களிடம் விட்ட சவாலில் தோற்கும் நேரம் வந்துவிட்டது என்று பாக்கியாவை நக்கல் அடிக்கிறார். அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருக்கு என்று பாக்கியா சொல்கிறார்.

கடைசியில் பாக்கியாவிடம் தோற்றுப் போய் ராதிகா மற்றும் கோபி நடுத்தெருவுக்கு போகப் போகிறார்கள். இதற்கு ஏன் தேடிப்போய் அவமானப்பட வேண்டும். ஒழுங்காக வாயை மூடிட்டு இருந்தா அந்த வீட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் இருந்திருக்கலாம். இன்னும் எதை வைத்து கதையை உருட்ட போகிறார்கள் என்று பார்க்கலாம்.

Also read: குணசேகரனின் அஸ்திவாரத்தை உடைக்கும் சில்வண்டு.. பெண்களின் அடிமைத்தனத்தை தோலுரிக்கும் எதிர்நீச்சல்

Next Story

- Advertisement -