தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்று தரும் சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலுக்கு மட்டும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
சமீபகாலமாக சன் டிவிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு தரமான சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் விஜய் டிவி சீரியல் இளைஞர்களையும் கவர்வது தான் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் விஜய் டிவி இளம் ரசிகர்களை குறிவைத்து அவ்வப்போது சீரியல்களை தயாரிக்கும் என்பது கூடுதல் தகவல். அதேபோல் தாய்மார்களையும் கவரத் தவறவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர். சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தை ஆட்டிப் படைத்தது.
இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஜெனிபருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களை பதம் பார்த்து வருகிறது. அதுவும் அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படமும், குட்டையான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறியுள்ளது.
சீரியலில் பெரும்பாலும் அம்மா வேடங்களில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் மிகவும் மார்டனாக இருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது.