சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மண்டையில இருந்த கொண்டையை மறந்த பாக்கியலட்சுமி.. கதை இல்லாமல் உருட்டும் விஜய் டிவி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு 20 லட்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பாக்யா, தற்போது பெரிய கேண்டீன் ஆர்டரை எடுத்திருக்கிறார். இந்த ஆர்டரை கொடுக்கும் போதே பாக்யாவிற்கு ஆங்கிலம் தெரியவில்லை என அதே நிறுவனத்தில் வேலை செய்த ராதிகா அசிங்கப்படுத்தியதால் எப்படியாவது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றுள்ளார்.

அங்கு நடந்த விஷயத்தை எழில் இடம் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு நபரின் வண்டியில் இடித்து விடுகிறார். அவர் தான் தற்போது சீரியல் என்ட்ரி கொடுத்திருக்கும் சினிமா பிரபலம். இவர் ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

முன்பு பாக்யா புதிதாக கடை திறக்கும் போது, அதற்கு சிறப்பு விருந்தினராக 90களில் டாப் ஹீரோவாக இருந்த ரஞ்சித் மற்றும் அவருடைய மனைவி பிரியா ராமன் இருவரும் வருகை தந்திருந்தனர். அப்படி இருக்கும்போது இப்போது மறுபடியும் பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் இப்போது கிராமத்துக்காரர் லுக்கில் வேறொரு கெட்டப்பில் இருக்கிறார். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல் நடிக்கின்றனர். ஆனால் இது சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ‘மண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டியே பாக்யா!’ என்று கலாய்த்து தள்ளுகின்றனர்.

Also Read: ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

அது மட்டுமல்ல ஏற்கனவே எழில் உடன் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் படிப்பதற்காக சென்றார். ஆனால் அதேபோன்று மறுபடியும் இப்போதும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்வது போல் கதையை உருவாக்கியுள்ளனர். இப்படி சீரியலில் கதையே இல்லாமல் உருட்டும் விஜய் டிவியை சின்னத்திரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

மேலும் ரஞ்சித் மற்றும் பாக்யா இருவர் இடையே நட்பு ஏற்பட போகிறது. இதன்பிறகு பாக்யாவின் கேட்டரிங் தொழிலில் ரஞ்சித் உறுதுணையாய் இருக்கப் போகிறார். இதை பார்த்து கோபி வயிற்றெரிச்சலில் பொசுங்க போவது உறுதி.

Also Read: உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

- Advertisement -

Trending News