Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது இனியாவின் ரோடு ட்ரிப்காக பாக்யா, ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் வெளியூருக்கு சென்று இருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கார் பாதியிலேயே நின்றுவிடுகிறது. இதை சமாளித்து பாக்யா அடுத்ததாக செல்லும்போது அங்கும் ஒரு பிரச்சனை காத்திருக்கிறது.
அதாவது ஒரு காட்டுக்குள் இவர்கள் செல்ல துரதிஷ்டவசமாக தனியாக பிரிந்து சென்று விடுகிறார்கள். இதில் ஈஸ்வரி பாட்டி காணாமல் போய்விடுகிறார். இதனால் ஒருபுறம் பாக்யா இவரைத் தேடுகிறார். மற்றொருபுறம் இனியா மற்றும் செல்வி இருவரும் ஈஸ்வரியை தேடி அலைகிறார்கள். அப்போது பாட்டியை காணவில்லையே என்ற பதட்டத்தில் இனியா கோபிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறுகிறார்.
இதற்கெல்லாம் காரணம் பாக்யா என்று கோபியும் அவசர அவசரமாக இனியா இருக்கும் இடத்திற்கு புறப்படுகிறார். கடைசியில் ஈஸ்வரி பாட்டி ஸ்வெட்டர் ஒன்று அணிந்திருக்கிறார். அதிலேயே போன் இருக்கும்போது இனியா பாட்டிக்கு போன் செய்யாமல் கோபிக்கு செய்து இருக்கிறார்.
இதனால் மண்டை மேல் இருக்கும் கொண்டையை இயக்குனர் மறந்தாரா அல்லது இனியா மறந்தாரா என்பதுதான் தெரியவில்லை. இவ்வாறு கதையே இல்லாமல் தேவையில்லாமல் வேறு விஷயத்தை உள்ளே கொண்டு வந்து இயக்குனர் உருட்டிக் கொண்டிருக்கிறார். ஒருபுறம் எழில் மற்றும் அமிர்தா இருவரும் இப்போது தான் நெருங்கி பழக ஆரம்பித்து இருக்கிறார்கள்.
Also Read : இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி
அதற்குள் இறந்ததாக இதுவரை நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் முன்னாள் கணவரும் வந்து விட்டார். மறுபுறம் நிறைமாத கர்ப்பிணியாக மனைவி இருக்கும் போது தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் செழியன் நெருங்கமாக பழகி வருகிறார். இவ்வாறு எதிர்பார்க்காத ட்விஸ்ட் என ரசிகர்களை எரிச்சல் அடைய செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு பேசாமல் பாக்கியலட்சுமி தொடரை சுபம் போட்டு முடித்து விடலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் பாக்கியா ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கி வருகிறார். கோபியிடம் மாட்டிக்கொண்டு என்னென்ன பாடுபட போகிறாரோ.
Also Read : குணசேகரன் மரணத்தை முன்பே கணித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இந்த காட்சியை கவனித்தீர்களா.?