நயவஞ்சகன், பச்சோந்தி நீ தான்.. ஆண்டவர் முன்னிலையில் அடித்து கொண்ட அசீம், விக்ரமன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே சண்டையும், கூச்சலுமாக இருந்த இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயிலும் அப்படியே தான் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் விடாமல் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு ப்ரோமோ காரசார விவாதமாக மாறி இருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்குமே ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இந்த இருவரும் இந்த புரோமோவிலும் அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Also read: மணிகண்டனை தொடர்ந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர்.. டிக்கெட் to பினாலேவால் விறுவிறுப்பான பிக்பாஸ்

அதாவது கமல் சில வார்த்தைகள் அடங்கிய அட்டையை கொடுத்து கொடுத்து இதில் எந்த குணாதிசயம் இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பொருந்தும் என்று கேட்கிறார். அப்போது அசீம் அறுவை, பச்சோந்தி, சுயநலம் ஆகிய வார்த்தைகளை கொடுத்து இதில் விக்ரமனுக்கு பச்சோந்தி தான் ரொம்பவும் பொருந்தும் என்று சொல்கிறார்.

மேலும் அவர் வீட்டில் இருப்பவர்களிடம் இரண்டு முகங்களை காட்டுகிறார் என்றும் சிவினிடம் மட்டும் வேறு ஒரு விக்ரமனை பார்க்கலாம் என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பான விக்ரமன் அடுத்ததாக வந்து அசீமுக்கு நயவஞ்சகன் என்ற குணாதிசயம் பக்காவாக பொருந்தும் என்று சொல்கிறார்.

Also read: அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. கெத்தான நடிகையை இறக்கி ட்ரெண்டாகும் வீடியோ

அது மட்டுமல்லாமல் அதற்கான ஒரு விளக்கத்தையும் கொடுக்கிறார். அதாவது வாரம் முழுவதும் ஒரு மாதிரி இருக்கும் அசீம் வார இறுதியில் வேறு ஒருவராக இருப்பார். மேலும் வாரம் முழுவதும் யாரிடமெல்லாம் அவர் சண்டை போட்டாரோ அவர்களுக்கெல்லாம் ஒரு காபி போட்டு கொடுத்து நல்லா பேசி சிரித்து சமாதானம் ஆகி விடுவார் என்று கூறுகிறார்.

இதற்கு பார்வையாளர்கள் தரப்பிலிருந்து பலத்த கரகோஷம் வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அசீம் அடுத்த வாரம் உனக்கு பாயாசம் தான் என்ற ரேஞ்சுக்கு விக்ரமனை முறைத்து தள்ளுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் விக்ரமனுக்கு தங்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். மேலும் நிச்சயம் இந்த டைட்டிலை விக்ரமன் தான் தட்டிச் செல்வார் என்று வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Also read: இந்த ரெண்டு பேரு என்ன கிழிச்சிட்டாங்கன்னு உள்ள வச்சிருக்கீங்க பிக்பாஸ்.. அநியாயமாக வெளியேற்றப்பட்ட தனலட்சுமி!

- Advertisement -