Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-bigboss

Videos | வீடியோக்கள்

அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. கெத்தான நடிகையை இறக்கி ட்ரெண்டாகும் வீடியோ

அதல பாதாளத்திற்கு சென்ற பிக் பாஸ் டிஆர்பியை உயர்த்துவதற்காகவே விஜய் டிவி அவரை வரவழைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி, கடின போட்டியாளராக இருந்த தனலட்சுமியின் வெளியேற்றமும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் விஜய் டிவிக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இப்படி சரிந்து கிடந்த டிஆர்பியை உயர்த்துவதற்காக விஜய் டிவி இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பங்களை பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைத்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் தான் ரசிகர்களை பெருமளவில் கவரும். அதேபோன்று இந்த சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பங்களை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

அந்த வகையில் நேற்று மைனா நந்தினி, சிவின் ஆகியோரின் ஃபேமிலி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அதில் மைனாவின் மகன் செய்த சேட்டை பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தது. அதே போன்று சிவினின் நண்பர்களின் வரவும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் இன்று யாருடைய குடும்பங்கள் வரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதில் இன்று வெளியான ப்ரோமோவில் ரட்சிதாவின் சகோதரர் மற்றும் அம்மா இருவரும் வருவது காட்டப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரோமோவில் மணிகண்டனின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். இது பலரும் எதிர்பார்த்ததுதான் என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷின் திடீர் என்ட்ரி வீட்டுக்குள் இருப்பவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏகப்பட்ட திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய அண்ணன் மணிகண்டன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து ஏற்கனவே அவர் பேசியிருந்தார். மேலும் அவருக்கு ஓட்டுகள் போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் இவர் இந்த டாஸ்க்கின் போது நிச்சயம் வருவார் என்று ஒரு சிலர் கூறினாலும் பிசியான நடிகையான அவர் நிச்சயம் வரமாட்டார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதல பாதாளத்திற்கு சென்ற பிக் பாஸ் டிஆர்பியை உயர்த்துவதற்காகவே விஜய் டிவி அவரை வரவழைத்துள்ளது. அதற்கேற்றவாறு தற்போது வெளியான ப்ரோமோவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Also read: நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்

Continue Reading
To Top