பிக் பாஸ்க்கு பிறகு வெளியில் ஆடும் கேவலமான கேம்.. அசீமுடன் சேர்ந்து விக்ரமனை கிழித்து தொங்கவிட்ட ராங்கி

விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பலரும் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆகுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அசீம் டைட்டிலை வின்னர் ஆனது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் ரியல் வின்னர் விக்ரமன் தான் என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றன.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் வீட்டிற்கு பிறகு விக்ரமன் ஆடும் கேவலமான கேம் அசிங்கமாக இருக்கிறது. அந்த கேமில் நான் உள்ளே செல்ல விரும்பவில்லை என்று பிக் பாஸில் ஏகப்பட்ட சண்டை போட்ட தனலட்சுமி பேட்டி ஒன்றில் விக்ரமனை கிழித்து தொங்க விடுகிறார்.

Also Read: ஒரு படம் கூட உருப்படியா ஓடல.. ஓவர் திமிரு காட்டும் பிக் பாஸ் பிரபலம்!

இவருடன் அசீம் உடன் இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விக்ரமன் பல பேட்டிகளை அளித்து கொண்டிருக்கிறார் அப்போது பெண் போட்டியாளர்களுக்கு எதிராக நடக்கும் அப்யூஸ் வெளிப்படுத்திய விக்ரமன் என அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால் தன்னை ஒரு சின்ன பொண்ணு என்று கூட பார்க்காமல் அவருடைய விஷயத்திற்காக யூஸ் பண்ணும்போது அது அப்யூஸ் ஆக தெரியவில்லையா என்று தனலட்சுமி சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.

இவர் இப்படி எல்லாம் பேசுவதால்தான் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது கூட அவர் பக்கம் கூட திரும்பிப் பார்க்காமல் இருந்திருக்கிறார் பிக் பாஸ் ராங்கி தனலட்சுமி. இவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் சிலர் தனலட்சுமியை, ‘பச்சோந்தி நீ ஆடாத ஆட்டமா! விக்ரமனை மக்கள் கொண்டாடுவதை பார்த்து உனக்கு எரிச்சல். அதனால் தான் இப்படி கண்டபடி உளறிக் கொண்டிருக்கிறாய்.

Also Read: வரிசையாக பிக்பாஸில் என்ட்ரியாகும் சீசன்-7 போட்டியாளர்கள்.. பசுந்தோல் போர்த்திய நரியை இறக்கி விட்டுருக்காங்க!

அசீம் உனக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறார். அசீம்க்கு சொம்பு தூக்கினால் மீடியாத்துறையில் வாய்ப்பு உண்டு என்று இப்படி பொய் கூவு கூவிக்கிட்டு இருக்கிறாய்’ என்றும் விலாசுகின்றனர். அதைப்போல் ‘வாயால் கெடும் தவளை. மனித இனத்தில் தனலட்சுமி’ என்றும் விமர்சிக்கின்றன.

மேலும் தனலட்சுமி, அசீம் இருவரும் சேர்ந்து கொண்டு மாறி மாறி விக்ரமனை குறை சொல்லுகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு போய், வேற வேலைய பாருங்க என்றும் சிலர் எரிச்சல் அடைகின்றனர். இருப்பினும் இவர்கள் இருவரும் விக்ரமனை டார்கெட் செய்து பேசுவதால், அவர்களுடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் பாப்புலரான 5 பிரபலங்கள்.. வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் கவ்விக்கிட்ட போயிடும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்