Connect with us
Cinemapettai

Cinemapettai

bb-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு படம் கூட உருப்படியா ஓடல.. ஓவர் திமிரு காட்டும் பிக் பாஸ் பிரபலம்!

வளரும்போது இவ்வளவு ஆட்டமா! இயக்குனர்களிடம் ஓவர் திமிரு காட்டும் பிக் பாஸ் பிரபலம்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்கினாலும் அவர்கள் வெகு சீக்கிரமே பிரபலம் ஆகி விடலாம், அதனால் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கின்றனர்.

அப்படிதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஒருவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு படம் கூட உருப்படியா ஓடல. ஆனால் திமிரு மட்டும் குறைஞ்ச பாடில்லை. ஹரிஷ் கல்யாண் இப்போது வரை மிகப் பெரிய வெற்றி படம் ஒன்று கூட ஒழுங்காக கொடுக்கவில்லை.

Also Read: தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

படங்களும் குறைவாகவே நடித்து வருகிறார். ஆனால் அதற்குள் தனக்கு கதை சொல்ல இயக்குனர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் அவர்கள் 2 படம் பண்ணி இருந்தால் மட்டுமே கதை கேட்பாராம். இதே போல் அதர்வா ஒரு படம் பண்ணி இருந்தால் மட்டுமே கதை கேட்பாராம் இல்லை என்றால் இவரிடம் கதை சொல்ல வரக்கூடாதாம்.

அதிலும் ஹரிஷ் கல்யாண் இவ்வளவு திமிரு காட்டுவதற்கு ஏதுவாக தற்போது பெரிய இடம் சிக்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய மனைவியுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர் முதன் முதலாக தமிழில் தயாரிக்கும் படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தான்.

Also Read: லவ் டுடே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற இவானா.. விளம்பரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமா?

இவருக்கு ஜோடியாக லவ் டுடே பிரபலம் இவானா நடிக்கிறார். இவர்களுடன் நதியா, யோகி பாபு உள்ளிட்டரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். அந்தப் படத்தின் டைட்டில் எல்ஜிஎம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படமான எல்ஜிஎம் திரைப்படம் ஹரிஷ் கல்யாணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இருப்பினும் அதர்வா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இன்று வரை ஒரு படம் கூட ஒழுங்காக வெற்றி கொடுக்கவில்லை. அவர்கள் இப்படி ஒரு திமிரை காட்டுகிறார்கள் என பேசி வருகிறார்கள். இப்படியே போனால் கூடிய விரைவில் இவர்கள் காணாமல் போவார்கள் என்று கூறப்படுகிறது.

Also Read: சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

Continue Reading
To Top