3000 கோடி பட்ஜெட், சல்மான்கான் வில்லன்.. அட்லியோட அடுத்த தென்னிந்திய டாப் ஹீரோ யார் தெரியுமா?

Atlee: அட்லி சினிமாவுக்கு வருவதற்கு முன் யார் முகத்தில் முழித்து விட்டு வந்திருப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு அதிர்ஷ்ட காத்து சரமாரியாக வீசுகிறது. அவருடைய குருநாதர் சங்கருக்கு கூட கிடைக்காத வாய்ப்பு எல்லாம் அட்லிக்கு சர்வ சாதாரணமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.

முதல் படமே சூப்பர் ஹிட், அதைத் தொடர்ந்து மூன்று படங்கள் தளபதி உடன். அது முடித்த கையோடு ஷாருக்கான் பட இயக்குனர் என வெற்றி மேல் வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறார். அட்லி மீது எவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

அவர் எடுக்கும் படங்கள் அவருடைய சொந்த கதையே இல்லை என்று அவர் மீதான குற்றச்சாட்டு முதன்மையாக வைக்கப்படுகிறது. ஆனால் அதை எல்லாம் சட்டை பண்ணாமல் உயர உயர பறந்து கொண்டே இருக்கிறார்.

அட்லியோட அடுத்த தென்னிந்திய டாப் ஹீரோ

தற்போது அவருடைய புது புராஜெக்ட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் மூவாயிரம் கோடி என்று சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் வில்லனாக நடிக்கிறார்.

இதுவே அதிர்ச்சியாக இருக்கிறது என்றால், ஹீரோ யார் என்று சொன்னால் மொத்த சினிமா உலகமும் அதிர்ந்து போய்விடும். அட்லீயின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கப் போகிறார்.

ரஜினிக்கு கூலி தான் கடைசி படம் என செய்திகள் வெளியான நிலையில், அவர் தற்போது அட்லியுடன் இணைய இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

- Advertisement -