அல்லு அர்ஜுனாவுக்கு டாட்டா காட்டிய அட்லி.. அடுத்த 1000 கோடி வசூல், சன் டிவி மாறனுக்கு விரித்த வலை

Atlee – Sun tv Maran: இயக்குனர் அட்லியை நம்பினால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையை சம்பாதித்து விட்டார். அதாவது ஒரு பக்கம் இவர் எடுக்கக்கூடிய படம் அனைத்தும் ஏற்கனவே வெளிவந்த ஒரு படத்தின் காபி கதையாக தான் இருக்கும் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் யார் என்ன வேணாலும் சொல்லுங்கள். என்னை பொறுத்தவரை வசூல் அளவில் நான் ராஜாவாக ஜொலிக்கிறேன் என்று தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகிறார்.

அப்படித்தான் சமீபத்தில் பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை வெற்றிகரமாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். இதனால் இவருடைய இயக்கத்தில் படத்தை பண்ணுவதற்கு அனைத்து நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பாலிவுட்டில் உள்ள ஹீரோக்கள் அட்லிக்காக தவம் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அட்லி ஆசைப்பட்ட சம்பளத்தை கொடுக்கும் சன் டிவி மாறன்

இந்த நிலையில் அட்லி, டோலிவுட்டிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்காக அல்லு அர்ஜுனா உடன் கூட்டி சேர்ந்தார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. இது சம்பந்தமாக அட்லீ இடம் பேசி அவருடைய சம்பளமாக 80 கோடி கொடுப்பதாக முடிவாகி இருந்தது. ஆனால் திடீரென்று அட்லி இப்பொழுது 100 கோடி சம்பளத்தை கேட்டதால் இந்த கூட்டணி பாதியிலேயே முறிந்து போய்விட்டது.

அதனால் அட்லி வேறொரு ஹீரோவை வைத்து நான் படத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று அல்லு அர்ஜுனாவுக்கு டாட்டா காட்டி விட்டார். இந்த நிலையில் மறுபடியும் பாலிவுட்டுக்கு போனால் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலை பார்த்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் சல்மான் கானுடன் ஒரு படத்தை பண்ணுவதற்கு பேசி சம்மதத்தை வாங்கிக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சல்மான் கான் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாக போகும் படத்தை சன் டிவி கலாநிதி மாறன் தயாரிக்கப் போகிறது. ஏற்கனவே அட்லி வசூல் அளவில் பெரிய லாபத்தை கொடுத்ததால் அவரை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்று கலாநிதி மாறன் முடிவு பண்ணி அட்லீ சொன்னதற்கு சம்மதத்தை தெரிவித்து விட்டது. அந்த வகையில் அட்லி ஆசைப்பட்ட மாதிரி 100 கோடி சம்பளத்தை கலாநிதி மாறன் கொடுக்க முன் வந்து விட்டார். இதனால் இவர்கள் கூட்டணியில் உருவாக்க போகும் படத்தின் அப்டேட்டை கூடிய விரைவில் வெளியிடுவார்கள்.

கைவிட்டுப் போன அட்லி அல்லு அர்ஜுனா கூட்டணி

Next Story

- Advertisement -