1000 கோடி வசூலை எடுத்த மெதப்பில் ஓவர் ஆட்டம் ஆடும் அட்லி.. ஆசை காட்டி மோசம் போன ஹீரோ

Atlee: விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களை மட்டுமே இயக்கிய அட்லி அனைவரும் கொண்டாடும் அளவிற்கு அனைத்து படங்களையும் வெற்றியாக கொடுத்தது இவருடைய தலையில் கிரீடம் இருப்பது போல் உணர்ந்து விட்டார். அதே கையுடன் பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானுடன் கைகோர்த்து ஜவான் படத்தில் 1000 கோடி வசூலை கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து ஒரு சாதனை படைத்து விட்டார்.

அதனால் அட்லி இன்னும் ஓவராக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் டோலிவுட்டிலும் ஒரு வெற்றியைக் கொடுத்து அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்று நினைத்தார். அந்த வகையில் புஷ்பா படத்தின் மூலம் பேரும் புகழையும் சம்பாதித்த அல்லு அர்ஜுனாவை வைத்து படம் எடுக்கலாம் என்று ஒரு கதையை தயார் செய்தார்.

வாய் துடுக்காக பேசிய அட்லி

இவர்கள் கூட்டணி உருவான நிலையில் இப்படத்தை தயாரிப்பதற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் கைகோர்த்தது. இந்த நிலையில் அட்லிக்கு இப்படத்தின் சம்பளமாக 80 கோடி வரை பேசப்பட்டது. ஆரம்பத்தில் ஓகே சொன்ன அட்லி தற்போது இவருடைய சம்பளத்தை டிமாண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அல்லு அர்ஜுனா படத்தை மேற்கொண்டு எடுக்க வேண்டும் என்றால் எனக்கு 100 கோடி சம்பளம் வேண்டும் என்று கரராக சொல்லிவிட்டார்.

இதை கேட்ட தயாரிப்பாளர் என்ன இவர் இஷ்டத்துக்கு சம்பளத்தை கூட்டிக் கொண்டே போகிறார். இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் 150 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அட்லி இடம் நீங்கள் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது.

ஆனால் ஆரம்பத்தில் பேசப்பட்ட படி உங்களுக்கு 80 கோடி சம்பளம் தருகிறேன் என்று பேசி இருக்கிறார். ஆனால் அட்லி அதெல்லாம் முடியாது நான் கடைசியாக எடுத்த படத்தின் வசூல் ஆயிரம் கோடி அது உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் என்னிடம் சம்பளத்தை பேரம் பேசுகிறீர்களா என்று வாய் துடுக்காக பேசி இருக்கிறார். உடனே தயாரிப்பாளர் என்னுடைய நிலைமை இதுதான் இதற்கு மேல் உங்களுடைய இஷ்டம் என்று அட்லிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

உடனே அட்லி இதெல்லாம் சரிப்பட்டு வராது நான் வேறொரு ஹீரோவை வைத்து அதற்கான கதையை ரெடி பண்ணி படத்தை எடுக்கிறேன் என்று சொல்லி அல்லு அர்ஜுனாவுக்கு டாட்டா காட்டிவிட்டார். ஆக மொத்தத்தில் அட்லியின் பேராசையால் தற்போது மோசம் போய் நிற்கிறது அல்லு அர்ஜுனா தான். அட்லீ இந்த மாதிரி சம்பளத்தில் கரராக இருப்பதற்கு காரணம் ஆயிரம் கோடி வசூலை கொடுத்திருக்கிறோம் என்று ஓவர் மெதப்பில் ஆட்டம் போடுகிறார்.

ஆனால் என்னதான் இவருடைய கதை இயக்கம் நன்றாக இருந்தாலும் ஆயிரம் கோடி வந்ததற்கு முக்கிய காரணம் ஷாருக்கான் என்ற ஹீரோ நடித்ததால் மட்டுமே என்பதை மறந்துவிட்டாரோ என்னமோ. இதே மாதிரி இடையில் துள்ளிய எத்தனையோ இயக்குனர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் அவஸ்தை பட்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு நிலைமை அட்லிக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த மாதிரி பேராசையால் வாய்ப்புகளை நழுவ விடாமல் இருந்தால் நிலைத்து நிற்க முடியும்.

ஓவராக ஆட்டம் ஆடும் அட்லி

Next Story

- Advertisement -