வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜயா மூஞ்சில் கரியை பூசும் மீனா.. சிட்டி பிளானை தோற்கடித்து மாலையை கொண்டு சேர்த்த முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மீனா கஷ்டப்பட்டு இரவு முழுவதும் பூமாலையே கட்டி சொன்னபடி 500 மாலையை ரெடி பண்ணி விட்டார். அத்துடன் முத்து, பூமாலை அனைத்தையும் ஒரு வண்டியில் ஏற்றி அரசியல்வாதி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் இந்த விஷயங்களை தெரிந்து கொண்ட சிட்டி இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி முத்துவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பிளான் பண்ணினார். அதன்படி பூமாலை போகும் வண்டியை மடக்கி அவர் வசம் கொண்டு போய்விட்டார். பின்பு முத்துவிற்கு அரசியல்வாதி இடம் இருந்து போன் வருகிறது இன்னும் ஏன் மாலை வரவில்லை என்று.

உடனே முத்து அவருடைய நண்பருக்கு போன் பண்ணி மாலையை கொண்டு போய் சேர்த்தீர்களா என்று விசாரிக்கிறார். அதன் பின்னர் அவர் சொல்றார் அந்த வண்டியை காணும் யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க என்று. அதற்கு முத்து சரியான நேரத்தில் மாலை போகவில்லை என்றால் அவர் என்னை சும்மாவே விட மாட்டார் என்று சொல்லி புலம்புகிறார்.

Also read: மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

அந்த நேரத்தில் மீனா, முத்துவுக்கு ஆறுதல் சொல்லி என்ன நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட விஜயா இப்படிதான் பூக்காரிக்கு வேணும். 2 லட்ச ரூபா கிடைக்கப் போகிறது என்று ஓவரா ஆட்டம் இருந்துச்சு என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். அதே மாதிரி ரோகிணி மற்றும் மனோஜும் இந்த ஒரு விஷயத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஆனால் இதை எப்படியாவது சரியான நேரத்தில் சேர்த்து விட வேண்டும் என்று முத்து முயற்சி பண்ணி எப்படியோ கண்டுபிடித்து விடுவார். மேலும் முத்து எதிர்பார்த்தபடி இதற்கான தொகையாக 2 லட்ச ரூபாய் கிடைத்துவிடும். இந்த பணத்தை மீனா, முத்து கார் வாங்குவதற்கு கொடுக்கப் போகிறார்.

இதுவரை என் வீட்டை அடமான வைத்துதானே கார் வாங்கி கொடுத்தேன் என்று சொன்ன விஜயா மூஞ்சில் கரியை பூசும் விதமாக மீனா அவருடைய கணவருக்காக பாடுபட்டிருக்கிறார். அதன் பின் போகப்போக சிட்டி தான் இதற்கு காரணம் என்ற உண்மை தெரிந்ததும் முத்துவின் சுயரூபம் என்னவென்று சிட்டிக்கு தெரியவரும். அத்துடன் மீனாவின் தம்பியை விட்டு விலகி ஓடி போய்விடுவார்.

Also read: டாம் அண்ட் ஜெரியாக மாறி கொஞ்சும் முத்து மீனா.. வயிற்றெரிச்சலில் பொங்க போகும் ரோகிணி விஜயா

- Advertisement -

Trending News