எல்லாரும் நினைச்ச மாதிரியே KPY பாலா, லாரன்ஸ் எடுத்த முடிவு.. மாற்றம் போடும் பலமான அஸ்திவாரம்

KPY Bala and Lawrance: கோடி கோடியாய் பணம் இருந்தாலும் கொடுக்க மனசு இருந்தாதான் அதற்கு மதிப்பு. ஆனால் அந்த மனசு பெரும்பாலும் யாருக்கும் இருக்காது. அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தின கூலியாக வேலை பார்த்து வருபவர்கள் கூட, கஷ்டப்படுபவர்களை பார்த்தால் அவர்களால் முடிந்த வரை உதவி செய்துவிட்டு மன நிம்மதியை பெற்றுக் கொள்வார்கள்.

இதில் ஒருவராகத் தான் விஜய் டிவி கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமான KPY பாலா பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இவருக்கு கிடைத்த பணத்தை வைத்து தான் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற முறையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாயை வழங்கி வந்தார்.

அடுத்த கட்ட லெவலுக்கு போகும் KPY பாலா, லாரன்ஸ்

இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது, இயலாத குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியது, மேலும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து பல உதவிகளை செய்து வருகிறார். இன்னும் இது போன்ற பல நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய இவருக்கு போதிய பணம் இல்லாததால் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டார்.

அவருக்கும் இந்த மாதிரி உதவிகளை செய்வது ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம். அதனால் பாலா கேட்டதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் கூடவே இருந்து தற்போது இருவரும் சேர்ந்து மாற்றம் என்கிற முறையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அப்படித்தான் KPY பாலா ஒரு முறை ட்ரெயினில் போய் கொண்டிருக்கும் பொழுது அங்கே வியாபாரம் செய்த ஒரு பெண் கஷ்டப்படுவதை பார்த்து உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு எனக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க வேண்டும். அதன் மூலம் என்னுடைய குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த பெண் ஆசைப்பட்ட மாதிரி ஆட்டோ வாங்கி கொடுத்து கனவை நிறைவேற்றி இருக்கிறார். இதே போல் கஷ்டப்படும் பெண்கள் ஆட்டோ ஓட்டிக்கொண்டு அதன் கடனை அடைக்க போராடும் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் லாரன்ஸ் உடன் சேர்ந்து அவர்கள் அடைக்க வேண்டிய கடனை அடைத்து அதற்கான பத்திரங்களை ஆட்டோ ஒட்டிய 10 பெண்களுக்கு திருப்பி கொடுத்து இருக்கிறார்.

இந்த வீடியோ சமீபத்தில் தான் வைரலாகி வெளிவந்தது. இப்படி இவர்கள் இருவரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்து வருவதில் அதற்கு தகுந்த மாற்றம் வேண்டும் என்பதற்கு ஏற்ப அரசியலுக்கு அஸ்திவாரத்தை போடப் போகிறார்கள். ஏற்கனவே நல்லது மட்டுமே நான் செய்ய விரும்புகிறேன் என்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் மூலம் விஜய் பயணித்து வருகிறார்.

அந்த வகையில் இவர்களுடைய நல்ல செயல்களை பார்த்த விஜய் அவர்கள் இருவருக்கும் போன் பண்ணி கூப்பிட்டு இருக்கிறார். சும்மா சாதாரணமாக செய்த உதவி இன்னும் அரசியல் செல்வாக்குடன் செய்தால் நிறைய மக்களுக்கு உதவியாக இருக்கும். அத்துடன் அதற்கான பலன் வேற மாதிரியாக இருக்கும். அதனால் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் சேர்வதற்கு கூடிய சீக்கிரத்தில் அஸ்திவாரம் போட போகிறார்கள்.

ஆச்சரியப்பட வைக்கும் KPY பாலாவின் செயல்கள்

Next Story

- Advertisement -