டாப் ஹீரோக்கள் வேடிக்கை பார்க்க KPY பாலா செய்த வேலை.. நாங்க கொடுக்கிற டிக்கெட் காசு தான் உங்களோட சொத்து மதிப்பு

Michaung Cyclone Help KPY BaLa: கடந்த நான்கு நாட்களாக சென்னை மக்களை அதிகமாக பரிதவிக்க விட்டது மிக்ஜாம் புயல். தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த வருடம் மழையுடன் கூடிய புயல் உருவாகி சென்னையில் உள்ள மக்களை அவதிப்படும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. இந்த மழை வருஷ வருஷமாக பெய்தாலும் இந்த தடவை புயலுடன் கூடிய மழை அதிகமானதால் வீட்டிற்குள் தண்ணீர் போயி அவர்களுடைய இருப்பிடத்தையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

இந்த நிலைமையில் மக்கள் அவதிப்படுவதை பார்த்து சும்மா வேடிக்கை பார்க்க முடியாது என்று பலரும் உதவி கரம் நீட்டி வருகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் பலரும் சும்மா இருக்கையில் அன்றாட தேவைக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிலர் உதவி செய்து வருவது மிகவும் பாராட்டு கூறியதாக இருக்கிறது.

அதாவது சினிமா பிரபலங்களை உச்சாணி கொம்பிற்கு அனுப்பி அவர்களை கோடியில் புரள வைத்தது முழுக்க முழுக்க மக்கள் மட்டுமே. அவர்கள் செலவழிக்கும் டிக்கெட் காசுகளை வைத்து தான் ஒவ்வொரு பிரபலங்களும் பண மழையில் நனைகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களை வாழ வைத்த அந்த மக்கள் தற்போது தர்ம சங்கடமான நிலையில் இருக்கும் பொழுது வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்.

Also read: புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

இவர்களுக்கு மத்தியில் சூர்யா, கார்த்தி, ஜி.வி பிரகாஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இவர்கள் அனைவரும் மக்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று இவர்களால் முடிந்தவரை உதவி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எத்தனையோ பெரிய பிரபலங்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக்கொண்டு, அதை கரையான் பிடிப்பதற்கு பூட்டியே வைத்து அழகு பார்க்கிறார்கள். அந்த வகையில் இவர்களெல்லாம் ஹீரோ இல்லை ஜீரோ என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.

இதற்கு மத்தியில் தினமும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் விஜய் டிவி KPY பாலா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000 ரூபாய் கொடுத்து வருகிறார். அத்துடன் சாப்பாடு மற்றும் கஷ்டப்படுபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவி கரம் நீட்டி வருகிறார்.

அதே மாதிரி அறந்தாங்கி நிஷாவும் இவரால் முடிந்தவரை உதவிகளை செய்து கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சின்ன ஆர்டிஸ்ட்டுகளை பார்க்கும் பொழுது இவர்கள் தான் நிஜத்தில் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவிற்கு  கஷ்டத்தை போக்கி வருகிறார்கள். இதுல வேற சினிமாவில் ஜெயித்ததன் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு இறங்குகிறோம் என்று சில ஹீரோக்கள் காய் நகர்த்தி வருகிறார்கள். இந்த ஒரு விஷயத்திலேயே அவர்களுடைய உண்மையான குணம் என்னவென்று தெரிந்து விடும்.

Also read: ஃபெயிலியர் ஹீரோ என சூர்யா அடி வாங்கிய 5 படங்கள்.. நடிப்பை கற்றுக்கொண்டு எடுத்த விஸ்வரூபம்..!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்