செகண்ட் இன்னிங்ஸை தவறவிட்ட அரவிந்த்சாமி.. 4 படங்களை ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கும் ஆணழகன்

Arvindhswamy who missed the second innings: பார்க்க ஆணழகனாக இருந்தால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக அரவிந்த்சாமி கேரியர் அமைந்துவிட்டது. சினிமாவிற்குள் நுழைந் ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் மூலம் சாக்லேட் பாயாகவும், மொத்த அழகையும் கொட்டி வைத்திருக்கும் நடிகராகவும் பெண்களின் மனதை வென்றார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராததால் இடைப்பட்ட காலத்தில் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

அதன் பிறகு செகண்ட் இன்னிங்ஸ் ஆக இவருக்கு கிடைத்த ஜாக்பாட் தான் தனி ஒருவன் படத்தில் சித்தாத் அபிமன்யு. இத்தனை நாளாக எங்க இருந்தாய் என்று கண்கள் தேடும் அளவிற்கு மொத்த நடிப்பையும் கொட்டி தீர்த்தார். சரி இதன் மூலமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும். தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அப்படியே இவருடைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

செகண்ட் இன்னிங்ஸ் பிறகும் நடித்த ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த நேரத்தில் இவர் கமிட்டாகி நடித்த ஒரு சில படங்களும் இன்னும் வெளிவராமல் பல வருடங்களாக இழுவையில் இழுத்து அடிக்கிறது. அதற்கெல்லாம் காரணம் இவருடைய கவனம் அனைத்தும் பணம் சம்பாதிக்கும் விதமாகத்தான் இருப்பதுதான். காசு விஷயத்தில் ரொம்பவே காரராக இருக்கிறார்.

Also read: மார்க்கெட்டில் விலை போகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. எதுக்கும் அசராமல் கேரியரை தொலைத்த அரவிந்த்சாமி

டப்பிங் பேசுவதற்கு சரியாக வரமாட்டிக்கிறார். எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த வேலையை செய்வேன் என்பதற்கு ஏற்ப இருக்கிறார். இப்படி இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே இவர் நடித்த படங்களும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஆனால் தற்போது தான் இவருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது.

திரும்பி பார்த்தால் எந்த படமும் வெளிவரவில்லை பல படங்கள் அப்படியே விலை போகாமல் இருப்பதால், தற்போது ஒவ்வொன்றையும் ரிலீஸ் பண்ணுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம், கள்ளபார்ட், புலனாய்வு, வணங்காமுடி இந்த படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும் என்று வெறியுடன் செயல்பட்டு வருகிறார்.

Also read: அரவிந்த்சாமி படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அக்கடதேசம் வரை பரவிய மணிரத்னம் புகழ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்