Are U Ok Baby Movie Review – பணமா, பாசமா? அபிராமி-சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியுள்ள ஆர் யூ ஓகே பேபி, முழு விமர்சனம்

Are U Ok Baby Movie Review: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இதற்கு முன்னதாக ஆரோகணம், ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இப்போது ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்திருக்கிறார். அதாவது சமுத்திரக்கனி, அபிராமி ஆகியோரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஆர் யூ ஓகே பேபி என்ற படம் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

குழந்தை தத்தெடுப்பில் என்னென்ன சிக்கல் இருக்கிறது என்பதை அற்புதமாக கூறியிருக்கிறார் இயக்குனர். அதாவது நடுத்தர வயதை எட்டிய சமுத்திரக்கனி மற்றும் அபிராமி தம்பதியினர் குழந்தை இல்லாமல் பரிதவிக்கிறார்கள். மற்றொருபுறம் அசோக் என்பவரை நம்பி முல்லையரசி திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக் கொள்கிறார்.

Also Read: மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. 2 தாயின் வலி, ஆர் யூ ஓகே பேபி ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ஆனால் தன்னுடைய வறுமையின் காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சமுத்திரகனி மற்றும் அபிராமி தம்பதியினருக்கு தன்னுடைய குழந்தையை முல்லையரசி விற்று விடுகிறார். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தை பாசத்தால் தத்தளிக்கும் முல்லையரசி வழக்கு தொடர்கிறார்.

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த குழந்தை மீது அதீத அன்பு காட்டி வளர்த்துள்ளார்கள் சமுத்திரக்கனி தம்பதியினர். மேலும் பணமா, பாசமா என்ற ஒரு நூலிலையில் கதை பயணிக்கிறது. இந்நிலையில் டாக் ஷோவான சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் வருகிறார். இதில் யாருக்கு தீர்ப்பு சாதகமாக வழங்குகிறார் என்பது தான் கிளைமேக்ஸ்.

Also Read: சமுத்திரகனியை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. அப்பாவாக நடித்த அந்த ரெண்டு கேரக்டர்

ஆர் யூ ஓகே பேபி படத்திற்கான பாசிடிவ் என்னவென்றால் இளையராஜாவின் இசை மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. மேலும் படத்தின் கதை கத்தி மேல் நிற்பது போல தான். சின்னதாக சொதப்பினாலும் அப்படியே கதை வேறு விதமாக மாறிவிடும். அதை கனகச்சிதமாக லட்சுமி ராமகிருஷ்ணன் கொண்டு சென்றிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் கதாபாத்திரத்தின் தேர்வு சரியாக அமைந்திருக்கிறது. படத்தின் சொதப்பல் என்றால் கிளைமாக்ஸ் காட்சியை எல்லோரும் யூகிக்கும் படியாக தான் வைத்திருந்தார். மேலும் இப்போது உள்ள சினிமா ரசிகர்களுக்கு சீரியல் சாயலில் இந்த படம் அமைந்திருக்கிறது. மற்றபடி ஒரு என்டர்டெய்னர் படமாக தான் ஆர் யூ ஓகே பேபி படம் அமைந்துள்ளது.

Also Read: மொத்தமாக செக் வைக்கும் இளையராஜா.. பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.25/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்