காமெடி மட்டுமல்ல முக்கிய ரோலில் பட்டைய கிளப்பிய வடிவேல்.. ரசிகர்களை அழவைத்த 6 படங்கள்

வடிவேலுக்கு நகைச்சுவை என்பது கைவந்த கலை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சாதாரணமாக வாய் மொழியோடு மட்டும் அல்லாமல் தனது உடல் மொழியோடும் நகைச்சுவையை ரசிகர்களுக்கு தரக்கூடியவர் வடிவேலு. ஆனால் ரசிகர்களின் மனதில் ரணமாகிய சில கதாபாத்திரங்களிலும் வடிவேலு நடித்து அசத்தியுள்ளார்.

எம்டன் மகன் : பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் எம்டன் மகன். இப்படத்தில் பரத்தின் தாய்மாமன் அய்யாக்கண்ணு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இப்படத்தில் ஆரம்பத்திலிருந்து நகைச்சுவையுடன் இருந்தாலும் அண்ணன் மகளையும், அக்கா மகனையும் சேர்த்து வைக்க வடிவேலு செய்யும் முயற்சி ரசிகர்களை கண்கலங்க செய்தது.

பொற்காலம் : சேரன் இயக்கத்தில் முரளி, மீனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொற்காலம். சமூக அக்கறை கொண்ட படமாக பொற்காலம் எடுக்கப்பட்டிருந்தது. ஊனமுற்றோர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையை இப்படம் பிரதிபலித்தது. வடிவேலுக்கு இப்படத்தில் மிகச் சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் தங்கமாக ஜொலித்தார் வடிவேலு.

ராஜகாளியம்மன் : ராம நாராயணன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், வடிவேலு, கௌசல்யா, கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜகாளியம்மன். இப்படத்தில் கள்ளங்கபடம் தெரியாத ஒரு சிறந்த அண்ணனாக வடிவேலு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

சங்கமம் : சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான், வித்யா, மணிவண்ணன் வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சங்கமம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தியிருந்தார். மேலும் காமெடியை தாண்டி எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

ஸ்ரீ பண்ணாரி அம்மன் : பாரதி கண்ணன் இயக்கத்தில் விஜயசாந்தி, கரன், லயா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்ரீ பண்ணாரி அம்மன். இப்படத்தில் கொழகத்த கோவிந்தன் என்ற துணை வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். மேலும் இப்படத்தை வடிவேலு கடவுள் பக்தி மிகுந்தவராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சேவல் : ஹரி இயக்கத்தில் பரத், பூனம் பாஜ்வா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சேவல். இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். மேலும் தபால் தங்கவேலுவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் சேவல் படத்தில் வடிவேலு பெற்றிருந்தார்.

Next Story

- Advertisement -