வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த பிரபல சீரியல்கள்.. தொடர்ந்து முன்னிலை வகிக்கும் எதிர்நீச்சல்

TRP Ratings: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை என்பதை அந்த வாரம் டிஆர்பி மூலம் தெரிந்து விடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இதில் 10-வது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகுவதால் டாப் லிஸ்டில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு போனது இதுக்கு தானா?. மட்டமான வேலை செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

அதன் தொடர்ச்சியாக 6-வது இடம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் Mr. மனைவி சீரியலுக்கு கிடைத்துள்ளது. 5-வது இடம் இனியா சீரியல் பெற்றுள்ளது. 4-வது இடம் வானத்தைப்போல சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ராஜபாண்டி மற்றும் அவருடைய தந்தை இருவரும் சேர்ந்து வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் துளசி பழி வாங்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் துளசி மற்றும் ராஜபாண்டி இருவரும் எப்போது சேருவார்கள் என ரசிகர்கள் இந்த சீரியலை ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கின்றனர்

தொடர்ச்சியாக 3-வது இடம் சுந்தரி சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கலெக்டராக தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்ட சுந்தரியின் ஆட்டம் ரசிகர்களுக்கு உத்வேகமாக இருக்கிறது. இந்த புது மாற்றம் ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது. மேலும் 2-வது இடம் எதிர்நீச்சல் சீரியல் பெற்றுள்ளது. இதில் ஆதி குணசேகரனின் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்துவின் நடிப்பை பார்ப்பதற்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: என் பிள்ளைகளை படிக்க வைத்தது அந்த நடிகர் தான்.. ஆதி குணசேகரனின் மறுபக்கம்

ஆனால் அவர் கடந்த வாரம் திடீரென ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்தது ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்களையும் உலுக்கியது. இனி சில வாரங்களுக்கு மட்டுமே குணசேகரன் ஆக மாரிமுத்துவை பார்க்க முடியும் என்ற ஆதங்கத்துடன் இந்த சீரியலை கண்ணீருடன் பார்க்கின்றனர். வழக்கம் போல் குணசேகரன் ஆக தன்னுடைய நக்கல் நையாண்டிக்கு குறைச்சல் இல்லாமல் மாரிமுத்து எதிர்நீச்சலில் அலப்பறை செய்திருந்தார்.

முதல் இடம் கயல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கயல் தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனையை ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எவ்வளவு சவாலுடன் சமாளிக்கிறார் என்பதை இந்த சீரியலில் விறுவிறுப்புடன் காட்டுகின்றனர். கடந்த வாரத்தில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இன்னமும் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.

Also Read: மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

- Advertisement -

Trending News