ரஜினியை விட விஜய் ரசிகர்களுக்கு எதிரியாக மாறிய நடிகர்.. இதுக்கு பின்னாடி ஒரு பிளாஷ்பேக்கே இருக்கு

Actor Vijay Controversy: தளபதி ரசிகர்களுக்கு இப்போது ரஜினியை தாண்டி இன்னொரு நடிகரின் மீது வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய படத்தில் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியது தான்

கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தை அவர் மிகவும் நம்பி இருந்தார். ஆனால் தீபாவளியை முன்னிட்டு வெளியான ஜப்பான் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் கலவையான விமர்சனங்கள் குவிகிறது. படம் மொக்கையா இருக்கு, செம போர் என நிறைய நெகட்டிவ் கமெண்ட்களை பரப்பியது தளபதி ரசிகர்கள் தான் என சொல்லப்படுகிறது.

அப்படி என்ன விஜய் ரசிகர்களுக்கு ஜப்பான் படத்தின் மீது கோபம் என்று பார்த்தால், அதற்கு பின்னாடி ஒரு பிளாஷ் பேக்கே இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான சமயத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரித்த கார்த்தியின் கைதி படமும் வெளியானது. விஜய் படத்தோட மோதுகிறீர்களா என செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தெனாவட்டாக பதில் சொன்னது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது.

Also read: இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

ஆனால் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் அடுத்த விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் தளபதி ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். இப்போது அந்தக் கோபத்தை தான் காட்டுகின்றனர். ஏனென்றால் ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தான்.

ஜப்பான் படத்தில் விஜய்யை தாக்கி நிறைய வசனங்கள் பேசி இருக்காரு என்று கார்த்தி மீது தளபதி ரசிகர்கள் வன்மத்தை கக்குகின்றனர். ஜப்பான் படத்தில்இடம்பெறும் ஒரு காட்சியில், ‘இந்தப் பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார்’ என்று ஒரு டைட்டில் கார்டு கொடுக்கின்றனர். இது விஜய்யை தாக்குவதாக நினைத்து கார்த்தியை எதிரியாக பார்ப்பது போல பல வேலைகளை செய்கின்றனர்.

Also read: சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி