சிங்கப்பெண்ணில் அன்புவிடம், ஆனந்தி கேட்ட அந்த ஒரு கேள்வி.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க போல!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பரபரப்பாக ஆரம்பித்தது. ஆனால் வார இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஒப்புக்கு சப்பானாக ஆகிவிட்டது. ஆனந்தியை கைது செய்தது முதல் நந்தாவின் கொலை வரை பார்ப்பதற்கு சுவாரஸ்யம் குறையாமல் இருந்தது.

நந்தாவை யார் கொலை செய்திருப்பார் என்று முதல் நாளே ஓரளவுக்கு ரசிகர்களால் யூகிக்க முடிந்திருந்தது. அதே மாதிரி அன்பு கொலையாளியுடன் ஜெயிலுக்கு வந்து ஆனந்தியை காப்பாற்றினான். சைடு கேப்பில் மித்ரா பத்திரிக்கைக்கு போன் செய்து வரச்சொல்லி ஆனந்தியை புகைப்படம் எடுத்து செய்தியாக போடுங்கள் என போலீசுக்கு ஐடியா கொடுத்தது வேற லெவல்.

இப்படி சொன்னதுக்கு முதலில் மித்ராவை தான் உள்ளே தள்ளி இருக்க வேண்டும், நடிப்பு போலீஸ் என்பதை சிறப்பாக காட்டி விட்டார்கள். போதாத துறைக்கு ஜெயிலிலிருந்து ஆனந்தி வெளியே வந்ததும் வார்டன் ஆகத்துக்கும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக மாறி ஹாஸ்டல் வாட்ச்மேனை வேலையை விட்டு போக சொன்னதெல்லாம் பார்க்கவே கடுப்பாக இருந்தது.

மேலும் இனிமேல் நீ உன் தோழிகளோடு தங்கக்கூடாது என்று சொல்லி ஆனந்திக்கு தனியறை கொடுத்திருக்கிறார் வார்டன். சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த காட்சியை பார்க்கும் போது கண்டிப்பாக சிரிப்பு தான் வந்திருக்கும்.

இப்போதான் ஒரு பிரச்சனை முடிந்து இருக்கிறது அதற்குள் ஆனந்தி, அன்புவிடம் இவ்வளவு நடந்தும் ஏன் என் அழகன் என்னை பார்க்க வரவில்லை என்று கேட்கிறாள். இவ்வளவு பிரச்சனை ஆகிவிட்டதே இனி அழகனே வேண்டாம் என்று ஒரு முடிவு எடுக்க வேண்டும், இல்லை என்றால் அழகனைத் தேட முயற்சி எடுக்க வேண்டும்.

ஆனந்தியிடம் இது இரண்டுமே கிடையாது. சிங்க பெண்ணே என்ற சீரியல் டைட்டில் கதாநாயகியாக இருந்து கொண்டு இதுவரை ஆனந்தி தைரியமாக எதுவுமே செய்தது கிடையாது. ஆனந்தி கஷ்டப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் நான்தான் அழகன் என்ற அன்பு சொன்னாலும் அதற்கு ஒரு பிரச்சனை செய்வாளே தவிர, எதையுமே தீர விசாரிப்பது கிடையாது. இந்த சீரியலுக்கு எதுக்குத்தான் சிங்க பெண்ணே என்ற பெயர் வைத்தார்கள் என்றுதான் இப்போது தோன்றுகிறது.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -