ரத்தக்களரியுடன் நாலு நாட்களாய் போராடிய லோகேஷ்.. இப்படி ஒரு ஏமாற்றத்தை என் கேரியரில் பார்த்ததில்ல

Lokesh Kanagaraj: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத ஏமாற்றத்தை போக்குவதற்காக லோகேஷ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் லியோ படத்தை பற்றிய நிறைய செய்திகள் இப்போது ரசிகர்களுக்கு தெளிவு படுத்தி வருகிறார். அந்த வகையில் லியோ படத்தின் மூலம் லோகேஷுக்கு கிடைத்த ஏமாற்றத்தை கூறியிருக்கிறார்.

அதாவது ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சாருக்கு அனுப்பப்படும். அந்த வகையில் லியோ படத்திற்கு யுஏ சான்று கிடைத்துள்ளது. ஆனாலும் லோகேஷ் விரும்பி எடுக்கப்பட்ட சில காட்சிகள் சென்சாரால் நீக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படம் அதிக வசூல் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.

Also Read : கமல், சூர்யா லியோல இருக்காங்களா.? லோகேஷ் கூறிய ட்விஸ்ட்டான பதில்

அவ்வாறு யுஏ சான்றிதழ் வாங்கினால் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கலாம். அதுவே ஏ சர்டிபிகேட் வாங்கினால் 18 பிளஸ் உள்ளவர்கள் மட்டும்தான் அந்த படத்தை பார்க்க முடியும். ஒரு வழியாக லோகேஷ் லியோ படத்திற்கு யுஏ சான்றிதழ் வாங்கி விட்டார். ஆனால் தணிக்கை குழு லியோ படத்தில் சில காட்சிகளை எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால் அந்த காட்சியை 18 வயதிற்கு அதிகமானவர்கள் கூட பார்க்க முடியாதபடி இருப்பதாக கூறியுள்ளனர். அதில் அதிரடியான சண்டைக் காட்சிகளும் நீக்கப்பட்டு இருக்கிறது என்று லோகேஷ் கூறியிருக்கிறார். மேலும் சில கெட்ட வார்த்தைகளையும் சென்சார் போர்டு மியூட் செய்ய சொல்லி உள்ளதாம்.

Also Read : மனநோயாளி லோகேஷ், சுயநினைவு இல்லாத விஜய்.. லியோவால் வலுக்கும் கண்டனம்

லோகேஷ் ரத்தக் களரியுடன் இடம்பெற்ற அந்த காட்சியை மிகவும் ஆசைப்பட்டு எடுத்ததால் தணிக்கை குழு உடன் நான்கு நாட்கள் போராடி பார்த்துள்ளார். ஆனாலும் அரசு இந்த காட்சியை பார்க்க கூடாது என சில விதிமுறைகள் வைத்துள்ளார்கள். மேலும் அந்த காட்சி படத்தில் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றம் தான் என லோகேஷ் கூறியிருக்கிறார்.

மேலும் சென்சார் போர்டு இதில் உறுதியாக இருந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் வேதனையுடன் பேசி இருந்தார். என் கேரியரில் இப்படி ஒரு ஏமாற்றத்தை பார்த்ததில்லை என்பது போல தான் லோகேஷின் நிலைப்பாடு இருந்துள்ளது. லியோ படத்தை பற்றி பல சுவாரசியமான விஷயங்களை ஊடகங்களில் லோகேஷ் பகிர்ந்து வருவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது.

Also Read : 1000 கோடி வசூலுக்கு சூடு பிடிக்கும் லியோ பட பிரமோஷன்.. விஜய்யுடன் ஆன மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்ச லோகேஷ்