1000 கோடி வசூலுக்கு சூடு பிடிக்கும் லியோ பட பிரமோஷன்.. விஜய்யுடன் ஆன மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்ச லோகேஷ்

Vijay In Leo: எப்பப்பா ஒரு படத்தை எடுத்து அதை நல்லபடியாக ரிலீஸ் ஆக்கி மக்கள் கொண்டாடும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு தான் இருக்கணும் போல. அதுவும் விஜய் படம்னா சொல்லவே வேண்டாம். இவருக்கு மட்டும் பிரச்சனை கொரியர்ல தினமும் வந்து கொண்டே இருக்கிறது. இவர் சும்மா இருந்தாலும் இவரை சுற்றி இருக்கிறவர்கள் சும்மா இருக்க விட மாட்டாங்க.

அதுபோல தான் ஒரு ஹீரோ படத்துக்கு தேவையான என்னென்ன விஷயங்கள் செய்யனுமோ அதை இயக்குனர் சொன்னபடி விஜய் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இவரை எப்படிடா மாட்டி விடலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு லட்டு மாதிரியான விஷயங்கள் லியோ ட்ரெய்லரில் கிடைத்திருக்கிறது.

Also read: ரெண்டு மாசமா உருட்டுனத 23 மணி நேரத்தில் காலி செய்த விஜய்.. கழுகை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை

அதாவது நான் ரெடி தான் வரவா பாடல்களில் விஜய் வாயிலில் சிகரெட்டை வைத்திருக்கிறார் என்று பிரச்சனை கிளம்பியது. அதை ஒரு வழியாக டிஸ்க்ளைமர் போட்டு முடித்தார்கள். ஆனால் தற்போது வந்த ட்ரெய்லரில் வன்மத்தை காட்டியும், மோசமான வார்த்தைகளையும் பேசி இருக்கிறார் என்று விஜய் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.

இது சம்பந்தமாக லோகேஷ் தற்போது அளித்த பேட்டியில் என்ன பிரச்சனை வந்தாலும் லியோ படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். அந்த வகையில் 1000 கோடி வசூலை பெறப்போகிறது என்று கூறுகிறார். அத்துடன் இப்படத்திற்கு தேவையான பிரமோஷனை இன்னும் ஒரு வாரத்தில் செய்யப் போகிறார்.

Also read: காதலுக்கு மரியாதை விஜய்யை திரும்ப கொண்டு வரும் தளபதி 68.. பல கோடிகளை வாரி இறைக்கும் ஏஜிஎஸ்

மேலும் லியோ படத்தின் பாடலை மற்ற மொழிகளில் கூடிய விரைவில் ரிலீஸ் செய்யப்படும். அடுத்ததாக இப்படத்தின் கடைசி காபி அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். அடுத்ததாக இப்படத்திற்கான பிரீ ரிலீஸ் துபாயில் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலும் பிரமோஷன் நடக்கும். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் மற்ற இடங்களில் அக்டோபர் 14ஆம் தேதி துவங்க இருக்கிறது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகம் முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் கோலாகலமாக ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய்யுடன் இருந்த சர்ச்சைக்கு லோகேஷ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Also read: லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி