மனநோயாளி லோகேஷ், சுயநினைவு இல்லாத விஜய்.. லியோவால் வலுக்கும் கண்டனம்

Leo-Lokesh-Vijay: லியோ ட்ரெய்லர் வந்தாலும் வந்தது இதுவரை படகுழு கட்டி காத்து வந்த மானம் எல்லாம் காற்றில் கற்பூரமாய் கரைந்து கொண்டிருக்கிறது. அதிலும் லோகேஷ் மற்றும் விஜய்க்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ட்ரெய்லரில் கொட்டி கிடந்த வன்முறை தான். அந்த அளவுக்கு கசாப்பு கடைக்காரன் போல எங்கு திரும்பினாலும் ரத்த வெள்ளத்தை ஓட விட்டிருக்கிறார் லோகேஷ். அவருடைய படங்கள் இப்படித்தான் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு கொடூரமான காட்சிகளையும், காது கூசும் கெட்ட வார்த்தைகளையும் நிச்சயம் ஆடியன்ஸ் எதிர்பார்க்கவில்லை.

Also read: 1000 கோடி வசூலுக்கு சூடு பிடிக்கும் லியோ பட பிரமோஷன்.. விஜய்யுடன் ஆன மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்ச லோகேஷ்

அதுதான் இப்போது சோசியல் மீடியாவில் ஆதங்கமாகவும், கோபமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் பெண்கள் இந்த ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் விஜய் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா என்றும் சுயநினைவு இல்லாமல் இருந்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் விஜய் படம் என்றாலே குடும்பத்தோடு பார்க்க போகலாம் என்ற நிலைதான் இதுவரை இருந்தது. ஆனால் லியோ ட்ரெய்லர் அத்தனை நம்பிக்கையையும் சுக்குநூறாக்கி விட்டது. இதைத்தான் கார்ட்டூனிஸ்ட் பாலா தன் சோசியல் மீடியா பக்கத்தில் கொஞ்சம் ஆவேசமாகவே பதிவிட்டு இருக்கிறார்.

Also read: லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. மாஸ்டரோட படதோல்வியினால் உஷாரான லேடி ஸ்டார்

அதாவது அடுத்த தலைமுறை கையில் அருவாளையும் ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் லோகேஷ் காட்டி இருக்கிறார். அவர் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் என குமுறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் மீது அக்கறையுள்ளவர்கள் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஒரு பக்கம் ஆதரவு எழுந்தாலும் பல ரசிகர்கள் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களின் படங்களை பற்றி குறிப்பிட்ட அதில் எல்லாம் வன்முறை இல்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் விஜய் வாயிலிருந்து பெண்களை இழிவுபடுத்தும் படியான ஒரு வார்த்தை வரும் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. அதுவே இந்த கண்டனங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Also read: காதலுக்கு மரியாதை விஜய்யை திரும்ப கொண்டு வரும் தளபதி 68.. பல கோடிகளை வாரி இறைக்கும் ஏஜிஎஸ்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்