அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணாங்க.. பகிர் கிளப்பிய வடிவேலு பட குத்தால அருவி ஹீரோயின்

Actor Vadivelu: சினிமாவில் நடிகைகளிடம் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர்களில் இருந்து, படம் சார்ந்த நிறைய பேர்கள் கேட்பது என்பது தற்பொழுது சகஜமாகிவிட்டது. ஒரு சில நடிகைகள் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களை தாராளமாக செய்து விடுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஒத்துக் கொள்ளாத நடிகைகள் அதன் பின்னர் பட வாய்ப்புகள் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. சினிமாவில் இருந்து காணாமலும் போய்விடுகிறார்கள்.

சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை ஒருவர், அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரால் தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ஹீரோயின் ஆக அறிமுகமாகி பின்னர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த இவர், நடிகர் வடிவேலுவுக்கு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். சின்னத்திரையிலும் நிறைய கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார்.

Also Read:விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில் நடிகர் பிரபுவின் தங்கையாகவும், வைகைப்புயல் வடிவேலுவுக்கு மனைவியாகவும் நடித்த தாரணி தான் இந்த நடிகை. இந்த படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இவர் நடித்த மாலா கேரக்டர் இன்றுவரை பிரபலமாக தான் இருக்கிறது. சமீப காலமாக வடிவேலு- தாரணி காமெடி காட்சி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக பயங்கரமாக வைரல் ஆகியது.

தாரணி சினிமாவில் இரண்டு படங்கள் ஹீரோயினாக நடித்த பிறகு அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடந்திருக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த படத்தின் இயக்குனர் மற்றும் கேமரா மேன் தாரணியிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார்கள். இதில் அவர் மறுத்ததும் இயக்குனர் அமைதியாகிவிட்டாராம். ஆனால் அந்த கேமரா மேன் ரொம்பவும் வெளிப்படையாகவே மீண்டும் மீண்டும் அவரிடம் இதை பற்றி பேசி இருக்கிறார்.

Also Read:மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

தங்கச்சி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த உன்னை நாங்கள் ஹீரோயின் ஆக்கி இருக்கிறோம், எங்களுக்காக நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தாரணி இதற்கு முந்தைய படங்களில் நான் அட்ஜஸ்மென்ட் செய்துதான் வாய்ப்பு வாங்கினேனா என கேட்டு பாருங்கள் என்று சொல்லி முகத்தில் அடித்தது போல் பேசி இருக்கிறார். அதன் பின்னர் அந்த கேமரா மேன் இதை பற்றி பேசவில்லையாம்.

இருந்தாலும் படப்பிடிப்பின் போது அதிக சூடு வெளியேறும் லைட்டை தாரணி மீது காட்டி ரொம்பவும் டார்ச்சர் பண்ணி இருக்கிறார். வெள்ளி திரையாக இருக்கட்டும், சின்னத்திரை சீரியல்களாக இருக்கட்டும் தாரணி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆரம்ப காலத்தில் தான் அனுபவித்த தொல்லையை பற்றி தற்போது மனம் விட்டு இவர் பேசியிருக்கிறார்.

Also Read:5 வருட காதல் கணவருக்கு அதிரடியாக விவாகரத்து கொடுத்த நடிகை.. அப்போ அது வதந்தி இல்ல உண்மைதானா.!

Next Story

- Advertisement -