இளம் நடிகைகளுக்கு செக் வைக்கும் நடிகர்.. வாய்ப்பை கொடுத்து விரிக்கும் வலை

Gossip: இப்போது காமெடி நடிகர்கள் எல்லோரும் கதையின் நாயகனாக மாறிவிட்டார்கள். அப்படித்தான் டாப் ஹீரோக்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார் அந்த காமெடி பிரபலம்.

நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு பிஸியாக நடித்து வந்த அவருக்கும் ஹீரோ ஆசை துளிர்விட்டது. அதற்கேற்றார் போல் அவரை தேடி வந்த வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இருந்தாலும் காமெடியையும் விட்டுவிடாமல் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சினிமா வாய்ப்பு தேடும் இளம் நடிகைகளாக பார்த்து வலைவீசி வருகிறாராம்.

காமெடி நடிகரின் லீலை

இப்போது சீரியல் நடிகைகள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் சினிமாவில் அவர்களுக்கு ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

அப்படிப்பட்ட இளம் பெண்களுக்கு நடிகரே போன் செய்து வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகிறாராம். ஏனென்றால் முன்னணி நடிகைகள் நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விடுகிறார்கள்.

அதனாலேயே இந்த காமெடி பிரபலம் சோசியல் மீடியா இளம் பிரபலங்களுக்கு கொக்கி போட்டு வாய்ப்பு கொடுக்கிறார். அப்படியே நாசுக்காக அட்ஜஸ்ட்மென்ட் ஆசையையும் கூறுகிறாராம்.

இதற்கு சில நடிகைகள் சம்மதித்தாலும் பல ஹீரோயின்கள் ஆளை விடு என தெறித்து ஓடுகிறார்கள். இதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.

நடிகைகளின் கிசுகிசு செய்திகள்

Next Story

- Advertisement -