அட்ஜஸ்ட்மென்ட்காக நடிகைகளை ஜோடியாக்கும் நடிகர்.. ஷகிலாவிடம் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த நடிகை

Actress Shakila Interview: சமீபத்தில் நடிகை ஷகிலா யூடியூப் சேனல்களில் பல சினிமா கலைஞர்களையும் பேட்டி எடுத்து வருகிறார். இதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றியும், சொந்த வாழ்க்கையை பற்றியும் ரொம்பவே வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது போன்ற ஒரு பேட்டியில் பிரபல காமெடி நடிகையும் கலந்து கொண்டிருக்கிறார்.

தொட்டி ஜெயா என்னும் படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமாகி பின்னர் பல காமெடி காட்சிகளில் நடித்தவர் தான் நடிகை பிரேம பிரியா. அட்லீ இயக்கத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா உடன் பணி புரியும் பெண்ணாக கூட இவர் நடித்திருப்பார். ஆர்யாவின் நண்பர் இவரிடம் தான் நஸ்ரியாவின் பெயரை கேட்பது போல் அந்த காமெடி காட்சிகள் அமைந்திருக்கும்.

Also Read:ஒரே நேரத்தில் அம்மா,மகள் இருவரையும் வேட்டையாடிய நடிகர்.. வாய்ப்புக்காக நடிகை பட்டபாடு

இவர் சமீபத்தில் நடிகை ஷகிலாவிடம் பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். ஒரு நடிகரால் தன்னுடைய சினிமா வளர்ச்சி மொத்தமாக பாதிக்கப்பட்டு விட்டதாகவும், கொரோனாவால் தன் அக்கா, அப்பா, கணவர் என அத்தனை சொந்தங்களையும் இழந்து விட்டு இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டதாகவும், அந்த நடிகர் தனக்கு நடிக்க கூட வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமா நகைச்சுவை உலகின் முடி சூடா மன்னனாக இருக்கும் வைகைப்புயல் வடிவேலும் இது தான் பிரேம பிரியா இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் ஜோடியாக நடிப்பதற்கு அந்த நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், அப்படி செய்தால்தான் அந்த நடிகைகளுக்கு அடுத்தடுத்து அவர் படங்களில் வாய்ப்புகள் கொடுப்பார் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Also Read:எக்ஸ் காதலருடன் வீட்டில் நடிகை அடித்த கூத்து.. விவாகரத்து கொடுத்த நட்சத்திர கணவர்

நடிகர் வடிவேலுவின் காமெடி குழுவில் இருந்த நிறைய நடிகர்கள் மற்றும் பயில்வான் ரங்கநாதன் கூட இது பற்றி தன்னுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். தற்போது ஒரு நடிகையை முன்வந்து வடிவேலு இப்படிப்பட்டவர் தான், அவரால்தான் என்னுடைய வளர்ச்சி மொத்தமாக தடுக்கப்பட்டது, அவருடன் நடிப்பதற்கு கிடைத்த பல வாய்ப்புகளை இந்த பெண் வேண்டாம் என இயக்குனர்களிடம் சொல்லி தட்டிக் கழித்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்று வரும் நடிகைகளுக்கு இப்படி ஒரு தொல்லை என்றால், காமெடி காட்சிகளில் நடிப்பதற்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று இவர் சொல்லும் பொழுது ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது. தன் ஆசைக்கு இணங்கும் நடிகைகளை தான் வடிவேலு தொடர்ந்து தன் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார், இதனால் இந்த நடிகை பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

Also Read:மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Next Story

- Advertisement -