மகளுக்காக ரஜினி இறங்கி போய் பிரித்து விட்ட நடிகை.. மீண்டும் பழிவாங்க ஜோடி சேர்ந்த தனுஷ்

Actor Dhanush: தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவருடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கப் போகிறார். இந்த படத்தில் அவருக்கு பிடித்தமான கதாநாயகி தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதுதான் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

ஏனென்றால் D50 படத்தில் யார் ஹீரோயின் என்ற பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் திரிஷா அடுத்தது சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி என்று கூறப்பட்டது. இப்போது அந்த லிஸ்டில் மார்க்கெட்டை இழந்து மும்பை பக்கம் தஞ்சமடைந்த நடிகையின் பெயரும் உள்ளே வந்திருக்கிறது.

Also Read: விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

ஆனால் இந்த நடிகையுடன் தனுஷ் நடிக்கவே கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரையும் பிரித்து வைத்திருந்தார். இவர்கள் ஏதாவது ஒரு படத்தில் இணைந்தால் அதை எப்படியோ கெடுத்து விடுவார். ஆனால் இப்போது கதையே வேற. தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விட்டு பிரிந்து விட்டார்.

இப்போது சுதந்திரப் பறவையாக இருக்கும் தனுஷுக்கு மாமனார் ரஜினி எந்த கட்டுப்பாடையும் விதிப்பதில்லை. தனுஷின் 50-வது படத்திற்கு கதாநாயகி யார் என்ற லிஸ்டில் அமலா பால் உள்ளே வந்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக  அபர்ணா பாலமுரளி நடிப்பதாக சொல்லப்பட்டது.

Also Read: தனுசுக்கு போன பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்.. பாராட்டியவருக்கே அடித்த விபூதி

ஆனால் தற்பொழுது அமலா பால் என செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த இருவரில் யார் ஜோடி என தெரியவில்லை. ஆனால் அமலா பால் படத்திற்குள் வந்ததே முக்கியமான செய்தி. எங்கேயோ இருந்த அமலா பாலை இந்த படத்திற்காக தேடிப் பிடித்து தனுஷ் கொண்டு வந்திருக்கிறார். தனுஷ் மற்றும் அமலா பால் இருவரும் வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே இருந்த நெருக்கம் படத்தில் மட்டுமல்ல திரை மறைவிலும் தொடர்ந்தது. இந்த விஷயம் தனுஷின் வீட்டில் பூகம்பத்தை கிளப்பியது. அந்த சமயத்தில், சூப்பர் ஸ்டார் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டார். தற்பொழுது சுதந்திரமாக சேர்ந்து விட்டனர். இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல. 

Also Read: தப்பி பிழைத்த தனுஷ், சிவகார்த்திகேயன்.. ஒருமுறை பட்ட பாட்டால் உஷாரான உச்ச நட்சத்திரங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்