தனுசுக்கு போன பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்.. பாராட்டியவருக்கே அடித்த விபூதி  

Actor Kavin: லிஃப்ட், டாடா இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஆனால் அதற்குள் சைலண்டாக ஒரு படத்தை 10 நாள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார் கவின். 

பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் எலன் அடுத்ததாக ஸ்டார் என்ற படத்தை ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக வைத்து ஆரம்பித்தார். ஸ்டார் படத்தின் போஸ்டரை ஹரிஷ் கல்யாண் இருப்பது போல் வெளியிட்டார்கள். அதில் தளபதி ரஜினி ஸ்டைலில் மாஸ் லுக்கில் இருந்தார்.

Also Read: விஜய், சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்கும் கவின்.. அடுத்தடுத்து இணையும் மெர்சல் கூட்டணி

படத்தின் கதை சின்ன ஆர்டிஸ்ட் முன்னணி  நடிகராக மாறுவதுதான். இந்த படத்தின் கதை நன்றாக இருந்ததால் தனுஷை வைத்து எடுக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்தது.  அதனால் ஹரிஷ் கல்யாணத்துக்கு பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது.

மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. தனுஷை ஓரங்கட்டி விட்டு எலன் கவினை புக் செய்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்கள் யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்துள்ளது. தற்போது தனுஷ் வாய்ப்பை தட்டி தூக்கிய கவின் படத்தின் கதையை கேட்டு எப்படியோ கெஞ்சி கூத்தாடி வாய்ப்பை பெற்று விட்டார்.

Also Read: தப்பி பிழைத்த தனுஷ், சிவகார்த்திகேயன்.. ஒருமுறை பட்ட பாட்டால் உஷாரான உச்ச நட்சத்திரங்கள்

இந்த படத்தில் கவின் நடிச்சா கண்டிப்பா பெரிய ஹீரோ ஆகிடலாம். அப்படி ஒரு கதை தான் இந்த ஸ்டார் படம். இந்த படம் வந்தால் கண்டிப்பாக பெரிய ஹீரோவான அந்தஸ்து கவினுக்கு கிடைக்கும். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படி கவினின் வளர்ச்சியை மறைமுகமாக ஆதரித்தும் பாராட்டியும் கொண்டிருந்த தனுசுக்கே  கடைசியில் விபூதி அடித்து விட்டாரே என்றும் நெட்டிசன்கள் இந்த தகவலை கேட்டு கிண்டல் செய்கின்றனர். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அனிருத்துக்கு விட்டுக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளிவர உள்ள ஏஆர் ரகுமானின் 5 படங்கள்.. எகிறும் மார்க்கெட்

- Advertisement -