தப்பி பிழைத்த தனுஷ், சிவகார்த்திகேயன்.. ஒருமுறை பட்ட பாட்டால் உஷாரான உச்ச நட்சத்திரங்கள்

சினிமாவில் சிவகார்த்திகேயனை ஒரு படிக்கற்களாக இருந்து கை தூக்கி விட்டவர் தான் தனுஷ். ஆரம்பத்தில் இவர்களுடைய காம்பினேஷன் நன்றாக போயிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் யாரோ மாதிரி ஒதுங்கி விட்டார்கள். அதன் பின் இன்னும்வரை இவர்கள் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை சினிமா பிரபலங்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படிப்பட்ட இருவர்கள் ஒற்றுமையாக ஒரு விஷயத்தில் இருக்கிறார்கள் என்றால் அது வருமான வரி கட்டுவது தான். அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கவர்மெண்ட் அறிவிப்பு விட்டிருந்தது.

Also read: அட இதுதான் சங்கதியா.? கேப்டன் மில்லருக்கு டாட்டா போட்டு மும்பையில் வட்டமிடும் தனுஷ்

இந்த அறிவிப்பு படி பாமர மக்கள் அதிக அவஸ்தை பட்டார்களோ இல்லையோ சினிமாவில் இருந்த அனைத்து பிரபலங்களும் இதில் மாட்டி முழித்து வந்தார்கள். ஏனென்றால் அப்பொழுது சரியாக அவர்கள் வருமான வரி கட்டாததாலும் கருப்பு மணியை எப்படி மாற்றிக் கொள்வது என்று தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் அந்த பணத்தை எப்படி ஒயிட் மணி ஆக்கணும் என்று யோசித்து தலையை பிச்சுக் கொண்டார்கள். ஒரு வழியாக அந்த இக்கட்டான சூழலில் இருந்து மெதுவாக வந்த நிலையில் அடுத்ததாக அதற்கு ஒரேடியான தீர்வு என்றால் வருமான வரி சரியான முறையில் கட்டுவது தான் என்று தெரிந்து கொண்டார்கள்.

Also read: குடும்பமாய் சிவகார்த்திகேயனை அழிக்க நினைத்து நடத்திய சதி.. இந்த மாதிரி கொடுமை நடக்குமா?

அதன்பின் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் சூதானமாகி அவர்கள் வாங்கும் கோடி கணக்கான சம்பளத்தில் 42 லட்சம் மட்டும்தான் டேக்ஸ் கட்டணும் என்ற போது அதை சரியாக கட்டி விடலாமே என்று கரெக்டா கட்டி வருகிறார்கள். மறுபடியும் இந்த வம்பு வேண்டாம் என்று உஷாராகி விட்டார்கள்.

இவர்கள் செய்த நல்ல விஷயத்தால் தற்போது தப்பித்து விட்டார்கள். அதாவது சமீபத்தில் கவர்மெண்ட் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு வந்த பிறகு இதைப் பற்றி எந்த நடிகர்களும் கவலைப்படவில்லை. ஏனென்றால் இப்பொழுது அஜித், ரஜினி, கமல், விஜய் எல்லோரும் கரெக்டா டேக்ஸ் கட்டுகிறார்கள். அத்துடன் இதிலிருந்து இளம் நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனும் சரியான முறையில் டேக்ஸ் கட்டி தப்பித்து விட்டார்கள்.

Also read: கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கு.. கமலால் சிவகார்த்திகேயனை போட்டு ஆட்டும் ஏழரை சனி

- Advertisement -