சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

42 வயதில் 84 ஆயிரம் கோடி சொத்து! அதானி, அம்பானிக்கு சவால் விடும் ரோஷ்னி யார் தெரியுமா?

Roshni Nadar: 42 வயதில் 84,000 கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பவர் தான் ரோஷ்னி நாடார். இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக இருக்கும் இவர் மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார்.

அதானி, அம்பானிக்கு சவால் விடும் வகையில் பல துறைகளில் சிறந்து விளங்கும் இவர் தான் HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. தற்போதைய நிலவரப்படி இந்த நிறுவனத்தின் மதிப்பு 364000 கோடி ஆகும்.

இதன் நிறுவனரான ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் ரோஷ்னி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டார். நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்டில் எம் பி ஏ பட்டம் பெற்றிருக்கிறார்.

ஆளுமை மிக்க ரோஷ்னி நாடார்

மேலும் இந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அவர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஷிவ் நாடார் அறக்கட்டளையை இவர் தன் கணவர் ஷிகர் மல்கோத்ராவுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

அத்துடன் இந்தியாவின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பழமையான இனங்களை பாதுகாக்கும் வகையில் The Habitats என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.

அதேபோல் அனிமல் பிளானட் டிஸ்கவரி சேனல்களுக்காக இந்தியாவில் அழிந்து வரும் வனவிலங்குகள் பற்றிய ஒரு தொடரை தயாரித்திருந்தார். அது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் சிறந்த தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.

இப்படி ஒரு தனி ஆளுமை மிக்க பெண்ணாக இருக்கும் இவர் கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் ஒருவராகவும் உள்ளார். அந்த வகையில் தனி சாம்ராஜ்யத்தை திறம்பட நடத்தி வரும் இவர் வருங்கால தலைமுறைக்கு சிறந்த முன்னோடியாக இருக்கிறார்.

- Advertisement -

Trending News