தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது

Jailer-Atlee: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நல்ல வசூல் பெற்றிருந்தது. ஆனால் ஆயிரம் கோடி வசூலை எதிர்பார்த்த நிலையில் 600 கோடியை நெருங்கி வசூல் செய்திருந்தது. ஆனால் 18 நாளில் இமாலய சாதனையை அடைந்துள்ளது அட்லியின் ஜவான் படம்.

பல வருடங்களாக இந்த படம் உருவாகி வந்தாலும் இப்போது கை மேல் பலனாக வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் கிட்டதட்ட 18 நாட்களில் ஜவான் படம் 1005 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஜெயிலர் படம் இந்த வசூலிக்கே தட்டு தடுமாறிய நிலையில் ஜவான் படம் அசால்டாக ஆயிரம் கோடியை தொட்டுவிட்டது.

Also Read : ஜெயிலர் போல் லியோ படத்திற்கு மாநிலம் வாரியா ஏற்பட்ட கடும் நெருக்கடி.. பெரும் தலைவலியில் தளபதி

அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த வசூல் இரட்டிப்பாகவும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஷாருக்கானின் வசூலை எந்த கொம்பனாலும் முறியடிக்கவே முடியாது என்ற நிலை இப்போது உருவாகி இருக்கிறது. அதாவது ஒரு படம் 1000 கோடி வசூல் செய்யவே டாப் ஹீரோக்கள் திணறி வருகிறார்கள்.

ஆனால் அசால்டாக ஷாருக்கான் ஒரு வருடத்திலேயே இரண்டு படங்கள் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்திருக்கிறார். அதாவது பாலிவுட் சினிமாவில் பெரிய நடிகர்கள் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்தது. அதுவும் பெரும்பாலான ரசிகர்கள் டாப் நடிகர்களின் படங்களை அங்கு பாய்காட் செய்து வந்தனர்.

Also Read : விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

இப்படி இருக்கும் சூழலில் ஷாருக்கானின் பதான் படம் இந்த ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 1050 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதுவும் இந்த படம் வெளியாவதற்கு முன்பு பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல் தான் ஜவான் படத்தின் டிரைலர் வெளியான போதும் பல படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்டது.

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே ஜவான் படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறது. இவ்வாறு ஷாருக்கானுக்கு இந்த வருடம் ஹிமாலய வெற்றியை கொடுத்திருக்கிறது. இதே வெற்றி வாகையுடன் அடுத்தடுத்த படங்களில் ஷாருக்கான் செயல்பட இருக்கிறார்.

Also Read : வெளியவே விடாமல் அட்லியை அமுக்கும் ஷாருக்கான்.. ராட்சச திமிங்கலத்துக்கு வீசும் வலை